என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்
- அக்சர் படேல் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளும் மேத்யூ குஹ்னெமன், டாட் மர்பி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 139 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதனையடுத்து அஸ்வின் - அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை கம்மின்ஸ் பிரித்தார். அஸ்வின் 37 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது. ஒரு முனையில் அதிரடியான ஆட்டத்தை வெளியப்படுத்திய அக்சர் படேல் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய அக்சர் படேல் 74 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த சமி 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 1 ரன் பின் தங்கி உள்ளது.
ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளும் மேத்யூ குஹ்னெமன், டாட் மர்பி தலா 2 விக்கெட்டும் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.