search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    5வது டெஸ்ட் போட்டி-  2 ஆம் நாள் தேநீர் இடைவெளியின்போது இங்கிலாந்து 60/3
    X

    பும்ரா

    5வது டெஸ்ட் போட்டி- 2 ஆம் நாள் தேநீர் இடைவெளியின்போது இங்கிலாந்து 60/3

    • இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது
    • இங்கிலாந்து 2 ஆம் நாள் தேநீர் இடைவெளியின்போது 356 ரன்கள் பின் தங்கியிருந்தது.

    பர்மிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்கிம்காம் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான இன்று முதல் இன்னிங்சில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களும் ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னும், சாக் கிராலி 9 ரன்னுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். உல்லிபாபு 10 ரன்னுடன் வெளியேறினார். இங்கிலாந்து 31 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    2 நாள் தேநீர் இடைவேளையின்போது 15.1 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 356 ரன்கள் பின் தங்கியிருந்தது. மூன்று விக்கெட்களையும் பும்ரா கைப்பற்றினார்.

    Next Story
    ×