என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: எத்திராஜ், விவேகானந்தா அணிகள் சாம்பியன் அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: எத்திராஜ், விவேகானந்தா அணிகள் சாம்பியன்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/07/1862372-womens.webp)
அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: எத்திராஜ், விவேகானந்தா அணிகள் சாம்பியன்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பெண்கள் பிரிவில் எத்திராஜ் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.
- தொடரின் சிறந்த வீரராக ஹர்ஸ் வர்த்தனும் (விவேகானந்தா), தொடரின் சிறந்த வீராங்கனையாக சுபா ஹரினியும் (எத்திராஜ் தேர்வு பெற்றனர்.
சென்னை:
குருநானக் கல்லூரி சார்பில் 7-வது பவித்சிங் நாயர் நினைவு அகில இந்திய கல்லூரிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதன் ஆண்கள் பிரிவில் விவேகானந்தா கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குருநானக்கை வீழ்த்தியது. முதலில் ஆடிய குருநானக் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய ஆர்.கே.எம். விவே கானந்தா கல்லூரி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது.
பெண்கள் பிரிவில் எத்திராஜ் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப்போட்டியில் குருநானக்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் ஆடிய குருநானக் அணி 3 விக்கெட் இழந்தது. 136 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய எத்திராஜ் கல்லூரி 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது.
தொடரின் சிறந்த வீரராக ஹர்ஸ் வர்த்தனும் (விவேகானந்தா), தொடரின் சிறந்த வீராங்கனையாக சுபா ஹரினியும் (எத்திராஜ் தேர்வு பெற்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்.ஆர்.எப். பேஸ் பவுண்டேசன் தலைமை பயிற்சியாளர் எம்.செந்தில்நாதன், இந்திய வீராங்கனை டி.ஹேமலதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.