search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வார்னர் தாக்கத்தை ஏற்படுத்துவார்- ஆஸ்திரேலிய பயிற்சியாளர் நம்பிக்கை
    X

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வார்னர் தாக்கத்தை ஏற்படுத்துவார்- ஆஸ்திரேலிய பயிற்சியாளர் நம்பிக்கை

    • டேவிட் வார்னர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
    • ஆஷஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிகளில் அவர் பெரிய பங்களிப்பை வழங்குவார்.

    ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரிலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக முக்கியப் பங்கு வகிப்பார் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டோனல்டு நம்பிக்கை தெரிவித்தார்.

    வார்னர் குறித்து ஆன்ட்ரூ மெக்டோனல்டு கூறியதாவது:-

    டேவிட் வார்னர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாங்கள் எதிர்வரும் தொடருக்கு அவரை அணியில் சேர்த்திருக்கிறோம். ஆஷஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிகளில் அவரது பெரிய பங்களிப்பை வழங்குவார் என நம்புகிறோம்.

    அவர் இரண்டு தொடர்களுக்குமே முக்கியமான பிளேயர் ஆவார். அவரை சேர்க்காமல் இருந்திருந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு பிறகு ஆஷஸ் தொடருக்கு நாங்கள் திறமையான வீரர் தேட வேண்டியது இருந்திருக்கும்.

    ஆனால், அதுபோன்ற நடைபெறவில்லை. அவரையே தேர்ந்தெடுத்து விட்டோம். முதல் 2 ஆஷஸ் தொடருக்கு நாங்கள் வீரர்களை தேர்வு செய்துவிட்டோம். வார்னரும் அந்த லிஸ்ட்டில் இருக்கிறார்.

    அவர் நல்ல ஆட்டத்திறனுடன் இருக்கிறார். நான் அவரிடம் சமீபத்தில் பேசினேன். அவர் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.

    இவ்வாறு மெக்டோனல்டு கூறினார்.

    ஆஸ்திரேலிய அணி கடந்த முறை சொந்த மண்ணில் 4-0 என்ற இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்து சாம்பியன் ஆனது.

    இந்த முறை இங்கிலாந்தில் ஆஷஸ் போட்டி அடுத்த மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது.

    அதற்கு முன்னதாகவே உலக டென்ஸ்ட சாம்பியன்ஷிப் போட்டி முடிந்து விடும். அதுவும் இங்கிலாந்தில் தான் நடைபெறுகிறது.

    இப்போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ஒரு பகுதியினர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

    Next Story
    ×