search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய வீரர்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய பிரதமர் மோடி- வைரலாகும் வீடியோ
    X

    இந்திய வீரர்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய பிரதமர் மோடி- வைரலாகும் வீடியோ

    • இந்திய வீரர்களின் ஓய்வு அறைக்கு சென்று பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
    • வெற்றி பெற தொடர் முழுவதும் கடுமையாக உழைத்ததாக பாராட்டினார்.

    புதுடெல்லி:

    கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை கிடைத்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டில் 2-வது தடவையாக உலக கோப்பையை பெற்றோம். அதன்பின் எந்த ஐசிசி கோப்பையும் இந்தியா வென்றதில்லை.

    இந்த நிலையில் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 19-ந்தேதி நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக ஐ.சி.சி. உலக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

    ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்று அசத்தியது. இந்த தோல்வியை சகிக்க முடியாமல் இந்திய வீரர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இந்நிலையில் இந்திய வீரர்களின் ஓய்வு அறைக்கு சென்று பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். வெற்றி பெற தொடர் முழுவதும் கடுமையாக உழைத்ததாக பாராட்டினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    Next Story
    ×