என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![நியூசிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு நியூசிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/08/31/1754655-new-zealand.jpg)
நியூசிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 2012 -ம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
- எனது சர்வதேச கிரிக்கெட்டை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன்.
நியூசிலாந்து அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம். நியூசிலாந்து அணிக்காக 2012 -ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். நியூசிலாந்து அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரான கிராண்ட்ஹோம் இதுவரை அந்த அணிக்காக 29 டெஸ்ட் போட்டியில் 1432 ரன்னும், 45 ஒரு நாள் போட்டியில் ஆடி 742 ரன்னும் மற்றும் 41 டி-20 போட்டிகளில் விளையாடி 503 ரன்களும் எடுத்து உள்ளார்.
மேலும், டெஸ்ட் போட்டிகளில் 49 விக்கெட்டும், ஒரு நாள் போட்டிகளில் 30 விக்கெட்டும், டி-20 போட்டிகளில் 12 விக்கெட்டும் வீழ்த்தி இருகிறார். இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆடி இருந்தார். மேலும், கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடி இருந்தார். இந்நிலையில், 36 வயதான காலின் டி கிராண்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.
ஒய்வு குறித்து கிராண்ட்ஹோம் கூறுகையில், நான் இன்னும் இளமையாக இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். பயிற்சிகள் கடுமையாகிக் கொண்டு உள்ளன, குறிப்பாக காயங்களுடன் பயிற்சி என்பது மிகவும் கடுமையாக உள்ளது என்று கூறினார். மேலும், கடந்த சில வாரங்களாக நான் எனது குடும்பத்தை பற்றியும், கிரிக்கெட்டுக்கு பின்னர் எனது எதிர் காலத்தை பற்றியும் சிந்தித்து கொண்டு உள்ளேன்.
2012 -ம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். எனது சர்வதேச கிரிக்கெட்டை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.