search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி வந்த சி.எஸ்.கே. வீரர்கள்
    X

    சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி வந்த சி.எஸ்.கே. வீரர்கள்

    • ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது.
    • கொல்கத்தா அணியுடனான மோதலில் சென்னை அணி தோற்றது.

    சென்னை:

    ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. கொல்கத்தா அணியுடனான மோதலில் சென்னை அணி தோற்றது.

    இந்நிலையில், போட்டி முடிந்தபின் கேப்டன் எம்.எஸ்.டோனி உள்ளிட்ட சென்னை அணியினர் மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    அப்போது டென்னிஸ் பந்துகளை ரசிகர்களை நோக்கி அடித்தனர் சென்னை வீரர்கள். சென்னை அணியின் ஜெர்சியையும் வீசினர்.

    வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர், டோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் வாங்கினார்.

    மைதான பராமரிப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு எம்.எஸ்.டோனி நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×