என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஹெட்டை வாழ்த்த வந்த வார்னர்.. பிளாக் செய்து ஷாக் கொடுத்த சன்ரைசர்ஸ்
- ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடிகள் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியது.
- சன்ரைசர்ஸ் நிர்வாகம் தம்மை பிளாக் செய்திருப்பதை அறிந்து டேவிட் வார்னர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்.
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடிகள் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியது.
இந்நிலையில் சக அணி வீரரான திராவிஸ் ஹெட்டை பாராட்ட நினைத்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு சன்ரைசர்ஸ் அணி ஷாக் கொடுத்துள்ளது.
அது என்னவென்றால் 6.8 கோடிக்கு விலை போன ஹெட்டை வாழ்த்துவதற்காக சன் ரைசர்ஸ் அணி நிர்வாகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வார்னர் தேடியுள்ளார். ஆனால் அப்போது தான் சன்ரைசர்ஸ் நிர்வாகம் தம்மை பிளாக் செய்திருப்பதை அறிந்து டேவிட் வார்னர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்.
அது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டேவிட் வார்னர் ஏமாற்றத்துடன் பகிர்ந்துள்ளார். அதில், டிராவிஸ் ஹெட் பற்றிய பதிவை பதிவிடுவதற்காக நான் முயற்சித்தேன். ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் என்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் செய்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல் எக்ஸ் தள பக்கத்திலும் சன்ரைசர்ஸ் நிர்வாகம் தம்மை பிளாக் செய்துள்ளதை வார்னர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த வார்னர் 2019 வரை அனைத்து தொடர்களில் 500-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.