என் மலர்
கிரிக்கெட் (Cricket)
டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாது: இந்திய முன்னாள் வீரர் கருத்து
- டெல்லி அணியில் எந்தெந்த வீரருக்கு என்னென்ன பணிகள் என்றே இதுவரை தெளிவு இல்லாமல் உள்ளனர்.
- அவர்களின் கீப்பர் யார் என்பதே புரியாமல் தான் இருக்கிறது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் டெல்லி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டெல்லி அணியில் எந்தெந்த வீரருக்கு என்னென்ன பணிகள் என்றே இதுவரை தெளிவு இல்லாமல் உள்ளனர். அவர்களின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும். டேவிட் வார்னர் - பிரித்வி ஷா ஓப்பனிங் ஆடுவார்கள். மிட்செல் மார்ஷ் 3-வது இடத்தில் ஆடலாம். ஏனென்றால் வார்னர் - பிரித்வியை 3-வது இடத்தில் களமிறக்க முடியாது.
4-வது இடத்தில் மணிஷ் பாண்டே. ரீலே ரூசோவ் அல்லது ரோவ்மன் போவெல் 5-வது இடத்தில் களமிறங்கலாம். 6-வது இடத்தில் சர்ஃப்ராஸ் கான். பெரும்பாலும் சர்ஃபராஸ் தான் கீப்பராக இருப்பார் என்று தெரிகிறது. வேறு பெரிய தேர்வுகள் அவர்களிடம் இல்லை. அவர்களின் கீப்பர் யார் என்பதே புரியாமல் தான் இருக்கிறது.
பவுலிங்கில் அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தான் ஸ்பின்னர்களுக்கு இருக்கின்றனர். இதனைவிட்டால் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் தான் பெரியளவில் இருக்கின்றனர். சேட்டன் சக்காரியா, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, ஆன்ரிக் நார்ட்ஜே ஆகிய 4 பேரில் 3 பேர் மட்டும் ப்ளேயிங் 11-ல் சேர்க்க வாய்ப்புள்ளது.
பழைய அணிகளில் 3 அணிகள் மட்டும் இதுவரை கோப்பையை வெல்லாமல் இருக்கிறது. டெல்லி அணி கோப்பைக்கு அருகில் சென்றுவிட்டது. ஆனால் இந்த முறை அருகில் கூட வரமாட்டார்கள்.
என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் இந்தாண்டு ஐபிஎல்-ல் விளையாட முடியாது. இதனையடுத்து புதிய கேப்டனாக டேவிட் வார்னர் களமிறங்குகிறார். இதுவரை ஒரு முறை கோப்பையை வெல்லாமல் உள்ள டெல்லி, இந்த முறை புதிய கேப்டனின் திட்டங்களால் சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.