என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஹாரி புரூக்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் சேர்த்து டிக்ளேர்
- முதலில் ஆடிய இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
- இங்கிலாந்து சார்பில் ஹாரி புரூக் 89 ரன்னும், டக்கெட் 84 ரன்னும் எடுத்தனர்.
மவுண்ட் மாவ்கனி:
இங்கிலாந்து அணி நியூசிலாந்து சென்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 58.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் சேர்த்தது. ஹாரி புரூக் 89 ரன்னும், டெக்க்ட் 84 ரன்னும் எடுத்தனர். ஒல்லி போப் 42 ரன்னும், போக்ஸ் 38 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், சபுத்தி, குஜ்ஜிலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
Next Story