என் மலர்
கிரிக்கெட் (Cricket)
லபுசேன் அரை சதம்: இங்கிலாந்து வெற்றிபெற 287 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
- டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 286 ரன்களை சேர்த்தது.
அகமதாபாத்:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் இறங்கினர்.
ஹெட் 11 ரன்னிலும், வார்னர் 15 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஸ்மித் 44 ரன்னில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் லபுசேன் பொறுமையுடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேமரூன் கிரீன் 47 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 35 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மார்க் வுட், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.