என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அந்த இடத்தில் கையெழுத்து போட முடியாது- டோனி குறித்து இஷான் கிஷன் கூறிய வைரல் வீடியோ

- வேறு இடம் இருந்தால் சொல்லுங்கள் நான் அங்கு கையெழுத்து போடுகிறேன்.
- நான் அவருடைய கையெழுத்துக்கு கீழே உள்ள இடத்திலே போடுகிறேன்.
ராஞ்சி:
இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தற்போது ரசிகர்களிடையே பிரபலமான வீரராக விளங்கி வருகிறார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடியதன் மூலம் 15 கோடிக்கு மேல் ஏலம் போய் முன்னணி வீரராக விளங்கி வந்தார். எனினும் இந்திய அளவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வங்கதேசத்துக்கு எதிராக இஷான் கிசன் சதம் விளாசினார்.
இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம், அதிவேக இரட்டை சதம் என இரண்டு சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இஷான் கிஷன் இருக்கிறார். இந்த நிலையில் ரஞ்சிப் போட்டியில் விளையாட வந்த இஷான் கிஷனிடம் ரசிகர் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். தனது மொபைல் போன் பின் பகுதியில் கையெழுத்திடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
"Sorry I can't sign above @MSDhoni's Autograph" - Ishan Kishan ❤️pic.twitter.com/5b5yhuEC3X
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) December 20, 2022
அப்போது போனை வாங்கி பார்த்த போது தான் இஷான் கிஷனுக்கு தெரிந்தது அதில் டோனியின் கையெழுத்து இருந்தது என்று. உடனே இதனை பார்த்து ஷாக்கான இஷான் கிஷன், அதில் டோனி பாயின் கையெழுத்து இருக்கிறது. என்னை ஏன் அதற்கு மேலே உள்ள இடத்தில் கையெழுத்துப் போட சொல்கிறீர்கள். அதை என்னால் செய்ய முடியாது.
வேறு இடம் இருந்தால் சொல்லுங்கள் நான் அங்கு கையெழுத்து போடுகிறேன். டோனி கையெழுத்துக்கு மேல் கையெழுத்து போடும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. நான் அவருடைய கையெழுத்துக்கு கீழே உள்ள இடத்திலே போடுகிறேன். அதுதான் அவருக்கு உரிய மரியாதை என்று இஷான் கிஷன் கூறியுள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.