search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி- 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வெற்றி
    X

    பிரித்வி ஷா

    நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி- 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வெற்றி

    • மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா ஏ அணி கைப்பற்றியது.
    • குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஏ அணி, இந்திய ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பேட் செய்தது. 47 ஓவர்களில் 219 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது. இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பின்னர் 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணி 34 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 222 ரன்கள் அடித்ததுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் பிரித்வி ஷா 77 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 'ஏ' அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    Next Story
    ×