என் மலர்
கிரிக்கெட் (Cricket)
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் கண்ணோட்டம்
- இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 39 போட்டியில் 3630 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் உள்ளார்.
- இந்தியாவின் அனில் கும்ப்ளே 111 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் கண்ணோட்டம் வருமாறு:-
இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 30 முறையும், ஆஸ்திரேலியா 43 முறையும் வெற்றி பெற்றன. 28 போட்டி டிராவில் முடிந்தது. ஒரு ஆட்டம் டை ஆனது.
இரு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 705 ரன் குவித்ததே (2004-ம் ஆண்டு சிட்னி) அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
ஆஸ்திரேலியா 674 ரன் எடுத்ததே (1998--ம் ஆண்டு அடிலெய்ட்) அந்த அணியின் அதிகபட்சமாகும். 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அடிலெய்ட் டெஸ்டில் இந்தியா 36 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். ஆஸ்திரேலியா 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த டெஸ்டில் 83 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 39 போட்டியில் 3630 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 2555 ரன் (29 போட்டி) எடுத்துள்ளார்.
ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்தவர் மைக்கேல் கிளார்க், அவர் 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிட்னியில் நடந்த டெஸ்டில் 329 ரன் குவித்தார். இந்தியா தரப்பில் வி.வி.எஸ். லட்சுமண், கொல்கத்தா டெஸ்டில் (2001-ம் ஆண்டு) 281 ரன் எடுத்தார்.
டெண்டுல்கர் 11 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். கவாஸ்கர், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் சுமித் ஆகியோர் தலா 8 சதங்கள் அடித்துள்ளனர்.
இந்தியாவின் அனில் கும்ப்ளே 111 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹர்பஜன் சிங் 95 விக்கெட்டும், நாதன் லயன் 94 விக்கெட்டும், அஸ்வின் 89 விக்கெட்டும் எடுத்து உள்ளனர்.