என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சிங்கம் சூர்யா போல Charge எடுத்த ரோகித்- கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

- அசுதோஷ் சர்மா- ப்ரார் ஜோடி மும்பை அணிக்கு பயத்தை காட்டியது.
- இறுதியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை போராடி வென்றது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 14 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதனை தொடர்ந்து 77 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த நேரத்தில் ஷஷாங்க் சிங்- அசுதோஷ் சர்மா ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்தது. ஷஷாங்க் சிங் 25 பந்தில் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த அசுதோஷ் சர்மா- ப்ரார் ஜோடி மும்பை அணிக்கு பயத்தை காட்டியது. அதிரடியாக விளையாடிய அசுதோஷ் சர்மா அரை சதம் அடித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 15 ஓவரில் 141 ரன்கள் எடுத்திருந்தது.
அந்த நிலையில் 16-வது ஓவரை மும்பை அணியின் மத்வால் வீசினார். அந்த ஓவரில் அதிரடி காட்டிய இந்த ஜோடி 3 சிக்சர் உள்பட 24 ரன்கள் குவித்தது. இதனால் 16-வது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 165 ரன்கள் குவித்தது. இதனால் 24 பந்துகளில் பஞ்சாப் அணிக்கு 28 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
அந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா மிகவும் பதட்டமாக காணப்பட்டார். அப்போது டைம் அவுட் கேட்கப்பட்டது. டைம் அவுட் முடிந்த நிலையில் இருந்து ரோகித் சர்மா பீல்டிங் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் ஆலோசனை நடத்துவது என கேப்டனாகவே மாறிவிட்டார். இதனை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் சிங்கம் படத்தில் சூர்யா charge எடுப்பது போல ரோகித் சர்மா எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.