என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டோனி, ரோஹித், கோலி கேப்டனாக இல்லாத ஐ.பி.எல். போட்டோ ஷூட்- வேதனையில் ரசிகர்கள்

- மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார்.
- சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் செயல்பட உள்ளார்.
ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக முறை கோப்பையை வென்றவர்கள் பட்டியலில் மும்பை (5 முறை)மற்றும் சென்னை அணிகள் உள்ளன. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க உள்ளது. முதல் லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் இன்று சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ருதுராஜ் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இருந்தது.
ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக செயல்பட்ட டோனி, ரோகித், விராட் ஆகியோர் இல்லாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். விராட் கோலி ஆர்சிபி கேப்டன் பதவியில் 2021-ம் ஆண்டு விலகினார். அவர் விலகினாலும் ஆர்சிபி எந்த நிகழ்ச்சி வைத்தாலும் அதில் விராட் முக்கிய வீரராக கலந்து கொள்வார். அவருக்கான மரியாதையை ஆர்சிபி நிர்வாகம் விராட்டுக்கு அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்டு பாண்ட்யா நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து டோனி கேப்டன் பதவியில் இருந்து நீங்கி ருதுராஜ் கேப்டனாக செயல்பட உள்ளார்.
ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக வலம் வந்த இந்த மூவரும் சாதாரண வீரர்களாக களமிறங்குவது வேதனையாக உள்ளது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சில ஐபிஎல் 2024 கேப்டன்கள் போட்டோஷூட்டில் டோனி இல்லாததை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் அவர் அணியில் இருந்தால் போதும் என கூறி வருகின்றனர்
கடந்த ஆண்டு ஐபிஎல் கேப்டன்கள் போட்டோஷுட்டில் ரோகித் சர்மா இல்லாமல் நடந்தது. ஆனால் அந்த முறை கேப்டனாக ரோகித் செயல்பட்டார். ஆனால் இந்த முறை அவர் சாதாரண வீரராக மட்டுமே செயல்படுவார் என்பது மும்பை ரசிகர்களுக்கும் சோகமான ஒன்றுதான்.