search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்த முறை இந்தியாவை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு எளிதல்ல- சோயிப் அக்தர்
    X

    சோயிப் அக்தர்

    இந்த முறை இந்தியாவை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு எளிதல்ல- சோயிப் அக்தர்

    • 2021 டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மெல்போர்னில் நடக்கும் போட்டியை சுமார் 1,50,000 ரசிகர்கள் பார்ப்பார்கள்.

    2022-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயார்ப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு தொடர்களில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த முறை இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு எளிதாக இருக்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சோயிப் அக்தர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு சவாலாக இருக்கும்.

    2021 டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இந்த முறை சரியான திட்டமிடலுடன் வரும்.


    இப்போதே போட்டி முடிவுகளை கணிப்பது கடினம். ஆனால் மெல்போர்ன் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் இரண்டாவது பந்து வீச வேண்டும்.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை காண இந்த முறை ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள் என்று நம்புகிறேன். மெல்போர்னில் நடக்கும் போட்டியை சுமார் 150,000 ரசிகர்கள் பார்ப்பார்கள். அதில் 70,000 பேர் இந்திய ரசிகர்களாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    Next Story
    ×