search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எம்ஐ கேப்டவுனிடம் வீழ்ந்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
    X

    எம்ஐ கேப்டவுனிடம் வீழ்ந்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

    • எம்ஐ கேப் டவுன் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 243 ரன்கள் எடுத்தது.
    • கேப் டவுன் தரப்பில் ஜார்ஜ் லிண்டே, ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ கேப் டவுன் - சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கேப் டவுன் அணியின் தொடக்க வீரர்களாக ரஸ்ஸி வான் டெர் டுசென் - ரியான் ரிக்கல்டன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினர். அதிரடியாக விளையாடிய வான் டெர் டுசென் 46 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200 குவித்தது. இந்த ஜோடியை இம்ரான் தாஹீர் பிரித்தார்.

    இறுதியில் எம்ஐ கேப் டவுன் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 243 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே ரன் எடுக்க திணறியது. இதனால் 3 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்த அணி சீரான இடைவெளியில் அடுத்ததுடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    கடைசி வரை போராடிய ஷேப்பர்ட் 34 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. இதனால் கேப் டவுன் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுன் தரப்பில் ஜார்ஜ் லிண்டே, ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Next Story
    ×