என் மலர்
கிரிக்கெட் (Cricket)

X
மகளுடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்ற எம்.எஸ்.டோனி... வைரலாகும் வீடியோ
By
மாலை மலர்1 Jan 2023 10:28 PM IST

- டோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியுள்ளது.
- வாண வேடிக்கைகளைப் பார்த்தவாறே தனது மகள் ஜிவாவை கொஞ்சி மகிழ்கிறார் டோனி.
உலகம் முழுவதும் 2023 புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் நேற்று இரவு முதலே பொது இடங்கள், குடியிருப்புகளில் குவிந்த மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி துபாயில் தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டை வரவேற்று குதூகலமாக கொண்டாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியுள்ளது. வாண வேடிக்கைகளைப் பார்த்தவாறே வீடியோவில் தனது மகள் ஜிவாவை கொஞ்சி மகிழ்கிறார் டோனி. இந்த வீடியோவுக்கு ஹேப்பி நியூ இயர் 2023 என்று தலைப்பிட்டு சாக்ஷி டோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Next Story
×
X