search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரோகித்-க்கு Good Bye சொன்ன மும்பை இந்தியன்ஸ்
    X

    ரோகித்-க்கு Good Bye சொன்ன மும்பை இந்தியன்ஸ்

    • மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்ட்யா ஏற்கிறார்.
    • ஐ.பி.எல். தொடரில் மிகச் சிறந்த கேப்டனாகவும் இடம்பிடித்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

    அதில், "மும்பை இந்தியன்ஸ் எதிர்காலத்தை கட்டமைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே தலைசிறந்த தலைவர்கள் வழிகாட்டல் இயற்கையாகவே அமைந்துவிட்டது. சச்சின் டெண்டுல்கர் முதல் ஹர்பஜன் சிங் முதல் ரிக்கி பாண்டிங் முதல் ரோகித் சர்மா வரை அனைவரும் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளனர்."


    "இந்த குறிக்கோளுக்கு ஏற்ப 2024 ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்ட்யா ஏற்க இருக்கிறார்."

    "ஒப்பற்ற தலைமையை வழங்கிய ரோகித் சர்மாவுக்கு நன்றி. 2013-ம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரோகித் சர்மா மிக சிறப்பாக செயல்பட்டார். அவரது தலைமையால் அணிக்கு வெற்றி கிடைத்ததோடு, ஐ.பி.எல். தொடரில் மிகச் சிறந்த கேப்டனாகவும் இடம்பிடித்துள்ளார்."

    "அவரது தலைமையில், மும்பை இந்தியன்ஸ் வெற்றிகர அணியாகவும், அதிகம் விரும்பப்படும் அணியாகவும் மாறி இருக்கிறது. களத்திலும், வெளியிலும் அணியை வலுப்படுத்த அவரின் வழிகாட்டுதல் மற்றும் அனுபவத்தை எதிர்பார்க்கிறோம். இதோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை வரவேற்று, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்," என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×