என் மலர்
கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பை பைனலில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதும்: நாதன் லயன் ஆரூடம்
- வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் வருகிற 1-ந்தேதி டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது.
- சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்த நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், இறுதிப் போட்டியில் மோதப்போகும் அணிகள் எவை? என்பது குறித்து விவாதம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் ஸ்பெஷலிஸ்ட் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாதன் லயன் கூறுகையில் "டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொறுத்தவரையில் ஒரு அணி எது என்றால் வெளிப்படையாக அது ஆஸ்திரேலியாதான். ஏனென்றால், நான் ஆஸ்திரேலியா சார்புடையவன். மற்றொரு அணி என்றால் அது பாகிஸ்தான் அணிதான். அங்குள்ள கண்டிசனை பொறுத்த வரையில் சுழற்பந்து வீச்சு எடுபடும். பாகிஸ்தான் அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மேலும், பாபர் அசாம் போன்று எலக்ட்ரிக் பேட்டர்ஸ் உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த தொடரில் மிட்செல் மார்ஷ் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது. பேட்டிங் பவர் உடன், சிறப்பாக பந்து வீசும் திறனும் பெற்றுள்ளார்" என்றார்.
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.