என் மலர்
கிரிக்கெட் (Cricket)
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
- மார்க் சேப்மேன் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 2 சிக்சர் விளாசினார்.
- பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முத்தரப்பு டி20 போட்டியில் இன்று பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலன் - கான்வே களமிறங்கினர். பின் ஆலன் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கான்வேவுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். கான்வே 35 பந்துகளில் 36 ரன்களுடனும் வில்லியம்சன் 30 பந்துகளில் 31 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிக்கொடுத்தனர். பிலிப்ஸ் 18, நீசம் 5, பிரேஸ்வெல் 0, சோதி 2, மார்க் சேப்மேன் 32 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். மார்க் சேப்மேன் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 2 சிக்சர் விளாசினார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளையும் நவாஸ், முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.