search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பாபர் அசாம் அதிரடி- நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
    X

    பாபர் அசாம் அதிரடி- நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் அரை சதம் அடித்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    முத்தரப்பு டி20 போட்டிகளில் இன்று நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 12 பந்துகள் சந்தித்த ரிஷ்வான் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மசூத் 0 ரன்னில் வெளியேறினார். இந்நிலையில் பாபர் அசாம் - ஷதாப் கான் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடிய ஷதாப் கான் 34 ரன்னில் அவுட் ஆனார். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் அரை சதம் அடித்தார். அடுத்ததாக களமிறங்கிய முகமது நவாஷ் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்னில் களத்தில் இருந்தார்.

    இறுதியில் பாகிஸ்தான் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    Next Story
    ×