search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மதிப்புமிக்க பொறுப்புடன் இந்திய அணிக்குள் வருவதில் பெருமை கொள்கிறேன் - கம்பீர்
    X

    மதிப்புமிக்க பொறுப்புடன் இந்திய அணிக்குள் வருவதில் பெருமை கொள்கிறேன் - கம்பீர்

    • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • எனது நாட்டிற்கு சேவை செய்வது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது. எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பு குறித்து கவுதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா எனது அடையாளம். எனது நாட்டிற்கு சேவை செய்வது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும். மதிப்புமிக்க வேறொரு பொறுப்புடன் மீண்டும் இந்திய அணிக்குள் வருவதில் பெருமை கொள்கிறேன்.

    ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 140 கோடி இந்தியர்களின் கனவுகளை தோள்களில் சுமக்கும் வீரர்களுடன் இணைந்து, அதனை நனவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×