search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ராஞ்சி டெஸ்ட்: இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்
    X

    ராஞ்சி டெஸ்ட்: இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்

    • தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது
    • இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றியுள்ளனர்.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் தங்கள் விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி திணறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரவிசந்திரன் அஷ்வின். இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளனர்.

    Next Story
    ×