என் மலர்
கிரிக்கெட் (Cricket)
அன்று நியூசிலாந்துடன்.. இன்று பாகிஸ்தானுடன்.. வைரலாகும் ரோகித் சர்மாவின் Fun வீடியோ
- ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது.
- இதைத் தொடர்ந்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.
அப்போது காயின் எங்க என்று கேட்ட ரோகித் சர்மா, டாஸ் காயினை பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டு அதனை மறந்து காணாமல் தேடியுள்ளார். அப்போது பாபர் அசாம் பாக்கெட்டில் இருக்கிறது என்று சிரித்து கொண்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்தார்.
இதேபோன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பிறகு பந்து வீச்சா அல்லது பேட்டிங்கா என்பது குறித்து அந்த நேரத்தில் மறந்து விட்டார். பின்பு சிறிது நேரம் யோசித்து பதில் அளித்து இது தொடர்பான வீடியோ அந்த சமயத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.