search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலகக் கோப்பை ரோகித் சர்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன்- குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி
    X

    உலகக் கோப்பை ரோகித் சர்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன்- குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி

    • மீட்டிங்கில் அவர் அதிரடியாக விளையாடும் எண்ணம் மற்றும் அணுகுமுறை பற்றி பேசுவார்.
    • இந்த வெற்றியை விட எங்களுக்கு வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது.

    2024 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக 8 வெற்றிகள் பெற்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார்.

    இந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்காக இந்த உலகக் கோப்பையை தாம் சமர்ப்பிப்பதாக சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு. அவருக்கு என்னை பிடிக்கும். நான் காயமடைந்த போது NCA-ல் இருந்தேன். அங்கு 2-3 நாட்கள் பயிற்சியில் இருந்தேன். அப்போது ரோகித், நீங்கள் அதை எப்படி செய்வீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் திரும்பி வந்ததும், உங்கள் பந்துவீச்சில் நான் சொல்லியிருக்கும் மாற்றங்களைப் பார்க்க விரும்புகிறேன் என்று என்னிடம் கூறினார்.

    இந்த உலகக் கோப்பை அற்புதமாக திட்டமிட்டு அணியை விரும்பி வழி நடத்திய ரோகித் சர்மாவுக்கானது. மீட்டிங்கில் அவர் அதிரடியாக விளையாடும் எண்ணம் மற்றும் அணுகுமுறை பற்றி பேசுவார். தொடர் நடைபெறும் போது அதை தன்னுடைய பேட்டிங்கில் செயல்படுத்திய அவர் அணியை முன்னின்று வழி நடத்தினர்.

    இந்த உலகக் கோப்பை அவரைச் சேரும். இந்த வெற்றியை விட எங்களுக்கு வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது. ஃபைனலில் விராட் பாய் 70 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். எனவே தன்னுடைய டி20 கேரியரை நினைத்து அவர் மகிழ்ச்சியடைவார் என்று நினைக்கிறேன். அதே போல தான் ரோகித் பாய். கடந்த வருடங்களில் நல்ல கிரிக்கெட்டை விளையாடிய ஜடேஜாவும் மகிழ்ச்சியடைவார்.

    இந்த வெற்றிக்கு பின் திறந்தவெளி பேருந்தில் சென்று ரசிகர்களுடன் கொண்டாடியதை நான் மறக்கவே மாட்டேன். அது போன்ற அனுபவத்தை நான் பெற்றதில்லை. 2007-ல் வென்ற போது ரோகித் பாய் அந்த அனுபவத்தை சந்தித்திருப்பார். ஆனால் எனக்கு மும்பையில் நடந்தது நம்ப முடியாத நினைவாகும்.

    என்று குல்தீப் கூறினார்.

    Next Story
    ×