என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![90மீட்டர், 100 மீட்டர் அடிக்கிறோம்.. கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க.. ரோகித் சர்மா 90மீட்டர், 100 மீட்டர் அடிக்கிறோம்.. கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க.. ரோகித் சர்மா](https://media.maalaimalar.com/h-upload/2023/09/29/1958181-rohit-sharma.webp)
90மீட்டர், 100 மீட்டர் அடிக்கிறோம்.. கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க.. ரோகித் சர்மா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆறு ரன்களை மட்டுமே கொடுப்பதில் எந்த நியாயமும் இல்லை.
- 551 சிக்சர்களை அடித்து ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கிரிக்கெட் போட்டிகளின் போது அதிக ரன்களை பெறுவதற்கு புதிய வழிமுறையை பரிந்துரைத்துள்ளார். அதன்படி ஒரு வீரர் 90 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்தால் அதற்கு எட்டு ரன்களையும், 100 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்தால் அதற்கு பத்து ரன்களையும் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மேலும் பேசிய அவர், பேட்டர்கள் எத்தனை தூரத்திற்கு செல்லும் வகையில் பந்தை அடித்தாலும் அதற்கு ஆறு ரன்களை மட்டுமே கொடுப்பதில் எந்த நியாயமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது கிரிஸ் கெயில் போன்ற அதிரடி வீரர்களுக்கு நியாயமற்ற செயல் ஆகும்.
பந்தை எளிதில் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்க விடுவதால் ரசிகர்கள் ரோகித் சர்மாவை ஹிட்மேன் என்று அழைக்கின்றனர். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை பறக்க விட்ட வீரர்கள் பட்டியலில் 551 சிக்சர்களை அடித்து ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் கிரிஸ் கெயில் 553 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
தனியார் யூடியூப் சேனலில், சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மாற்ற நினைக்கும் விதிமுறை என்ன என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது, அவர் இந்த பதிலை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.