search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எஸ்.ஏ. டி20  தொடர் - மழை காரணமாக இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது
    X

    எஸ்.ஏ. டி20 தொடர் - மழை காரணமாக இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது

    • எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நாளை மாற்றப்பட்டுள்ளது.
    • இதில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.

    செஞ்சூரியன்:

    எஸ்.ஏ டி20 கிரிக்கெட் லீக் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் சந்தித்தன. இதில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    ஜோகனஸ்பர்க்கில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுவதாக இருந்தது.

    இந்நிலையில், அங்கு மழை பெய்ததால் போட்டி தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை (12-02-2023) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×