என் மலர்
கிரிக்கெட் (Cricket)
X
இந்தியாவுக்கு எதிரான தொடர்: இலங்கை வேகப்பந்து வீச்சாளர் விலகல்
Byமாலை மலர்24 July 2024 4:31 PM IST
- காயம் காரணத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
- இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இந்திய வீரர்கள் இன்று 2-வது நாளாக வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்க உள்ள நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமீரா, காயம் காரணத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
அவரது காயத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை சரியாக தெரியவில்லை. இவருக்கு மாற்று வீரரை விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Next Story
×
X