என் மலர்
கிரிக்கெட் (Cricket)
600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய இளையோர் குத்துச்சண்டை: சென்னையில் நாளை தொடக்கம்
- அனைத்து உடல் எடை பிரிவிலும் தமிழக வீரர், வீராங்கனைகள் களம் காண்கிறார்கள்.
- ஆண்களுக்கு 13 வகையான எடை பிரிவிலும், பெண்களுக்கு 12 வகையான உடல் எடைப் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
சென்னை:
இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மற்றும் தமிழ் நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் எஸ்.ஆர். எம். பல்கலைக் கழகம் ஆதரவுடன் 5-வது தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உள் விளை யாட்டு அரங்கில் நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. வருகிற 11-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
ஆண்களுக்கு 13 வகையான எடை பிரிவிலும், பெண்களுக்கு 12 வகையான உடல் எடைப் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 33 மாநிலங்களை சேர்ந்த 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 150 பயிற்சியாளர்கள், 50 மானேஜர்களும் பங்கேற்கிறார்கள்.
அனைத்து உடல் எடை பிரிவிலும் தமிழக வீரர், வீராங்கனைகள் களம் காண்கிறார்கள்.
நாளை காலை 10.30 மணிக்கு இந்தப் போட்டியை தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் தொடங்கி வைக்கிறார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளர் பொன்னுசாமி, துணை பதிவாளர் அந்தோணி அசோக்குமார், தமிழ்நாடு குத்துசண்டை சங்க தலைவர் பொன்.பாஸ்கரன், செயலாளர் எம்.எஸ்.நாகராஜன் உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கி றார்கள்.