என் மலர்
கிரிக்கெட் (Cricket)
X
டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருப்பூர் -சேலம் அணிகள் இன்று மோதல்
Byமாலை மலர்13 July 2022 5:50 PM IST
- இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் -சேலம் அணிகள் மோதுகின்றன.
- திருப்பூர் அணி விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி ,2 தோல்வி அடைந்துள்ளது.
கோவை:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் -சேலம் அணிகள் மோதுகின்றன. திருப்பூர் அணி விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி ,2 தோல்வி அடைந்துள்ளது. சேலம் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்துள்ளது.
Next Story
×
X