என் மலர்
கிரிக்கெட் (Cricket)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நெதர்லாந்து த்ரில் வெற்றி- ஒரே போட்டியில் 5 சாதனைகள்
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை டை ஆனதன் மூலம் நெதர்லாந்து ஒரு தனித்துவமான சாதனையை முறியடித்தது.
- நெதர்லாந்து அணிக்காக தேஜா நிடமனுரு அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார்.
உலகக்கோப்பை தகுதி சுற்றில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்- நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 375 ரன்கள் அடித்தால் வெற்றி எந்த கடினமான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நெதர்லாந்து விக்கெட்டை இழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.
இதையடுத்து ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 30 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் 5 சாதனைகள் அரங்கேறியுள்ளது.
போட்டியை சமன் செய்த அதிகபட்ச ஸ்கோர்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை டை ஆனதன் மூலம் நெதர்லாந்து ஒரு தனித்துவமான சாதனையை முறியடித்தது. அவர்கள் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 374 ரன்களை சமன் செய்தனர். இதற்கு முன் நேப்பியரில் 2008-ல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் 340 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
சேசிங் செய்யும் போது மூன்றாவது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்
நெதர்லாந்தின் 374 ரன், ஒருநாள் போட்டிகளில் இலக்கைத் துரத்தியதில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும். ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் இதுவாகும். தென்னாப்பிரிக்கா 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 435 ரன்களை சேஸ் செய்து அதிகபட்ச சேசிங் ஆகும்.
சூப்பர் ஓவரில் அதிக ரன்
இந்தப் போட்டியில், லோகன் வான் பீக் கிரிக்கெட் வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். 30 ரன்கள் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.
முந்தைய சாதனையாக 2008-ல் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 போட்டியில் 25 ரன்களும், கடந்த ஆண்டு பெண்கள் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் ஓவரில் 25 ரன்கள் எடுத்ததே ஆகும்.
நெதர்லாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்த தேஜா நிடமனுரு
நெதர்லாந்து அணிக்காக தேஜா நிடமனுரு அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார். இவர் மார்ச் தொடக்கத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தனது முதல் சதத்தை அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நிக்கோலஸ் பூரன் மூன்றாவது அதிவேக சதம் அடித்தார்
63 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிவேக சதம் அடித்த மூன்றாவது வீரராக நிக்கோலஸ் பூரன் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 1999 -ல் வங்காளதேசத்திற்கு எதிராக பிரையன் லாரா 45 பந்துகளிலும், 2019-ல் இங்கிலாந்துக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 55 பந்துகளில் அதிவேக சதம் விளாசினர்.
அதற்கு அடுத்தப்படியாக ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இது மூன்றாவது அதிவேக சதமாகும்.