என் மலர்
கிரிக்கெட் (Cricket)
அரசுப்பள்ளி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பேட் கம்மின்ஸ் வீடியோ வைரல்
- நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
- ஐபிஎல் தொடரில் ரூ.20.50 கோடிக்கு பேட் கம்மின்சை ஹைதராபத் அணி ஏலம் எடுத்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பள்ளி சிறுவன் பந்துவீச பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்கிறார். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தடுமாறி வந்த நிலையில் புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்ற பேட் கம்மின்ஸ் ஹைதராபாத் அணியை பிளே ஆப் சுற்றுக்குள் கொண்டு போயுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ரூ.20.50 கோடிக்கு பேட் கம்மின்சை ஹைதராபத் அணி ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 ஆவது வீரர் என்ற பெருமையை அப்போது அவர் பெற்றார். ஆனால் இவ்வளவு தொகை கொடுத்து அவரை எடுக்க வேண்டுமா என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. ஆனால் அந்த விமர்சனத்தை தவிடுபொடியாக்கி ஹைதராபாத் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அவர் கொண்டு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.