search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்

    • தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக உலக கோப்பை இறுதிச்சுற்றில் நுழைந்துள்ளது
    • ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    கேப் டவுன்:

    மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    ஐந்து முறை உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்துடன் களமிறங்குகிறது. அதேசமயம், முதல் முறையாக உலக கோப்பை இறுதிச்சுற்றில் நுழைந்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, கோப்பையை கைப்பற்ற கடுமையாக போராடும். இதனால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    Next Story
    ×