என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
- அந்த மாயசக்தி உருவம் தேவர்களால், மற்றவர்களால் மூகாம்பிகா என அழைத்து ஆசி பெறுகின்றனர்.
- அதேநேரம் ஜாம்பவான் மகரிஷி என்பவர் கோலாவின் இயற்கை அழகை கண்டு இங்கு வந்து தவம் செய்ய முயல்கிறார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பசுமையான இயற்கை சோலைகள் கொண்ட சிற்றூர் கொல்லூர்.
இயற்கை எழில் சூழ்ந்த இக்கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது மூகாம்பிகை ஆலயம். கொல்லப்புறா என்ற பெயர் மருவி கொல்லூர் என அழைக்கப்படுகிறது.
கம்சாசூரன் என்ற அரக்கன் சிவனிடம் பல வரங்கள் பெற்று நாட்டையே துவம்சம் செய்து வந்தான்.
தேவர்கள், கடவுள்கள் எல்லாம் அவனுடைய தொந்தரவு தாங்க முடியாமல் தலைமறைவாகின்றனர்.
இதனால் தலைகனம் அதிகமாகி கம்சாசூரனின் தொல்லைகள் அதிகமாக அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிடுகின்றனர்.
அவர்களின் பேச்சை செவிமடுத்த சிவபெருமான் பொருத்தருளுங்கள் விடிவு பிறக்கும் என்கிறார்.
அதன்படி அனைத்து கடவுள்களின் தனிப்பட்ட சக்திகள் கோலாரிஷியின் ஆலோசனைப்படி ஒன்றினைக்கப்பட்டு மாயசக்தி உருவாக்குகின்றனர்.
அந்த சக்தி கம்சாசூரனுடன் போரிட்டு அவ்வரக்கனை அழிக்கிறது. அவனை அழித்த இடம் மரணகட்டி என்று அழைக்கப்படுகிறது.
அந்த மாயசக்தி உருவம் தேவர்களால், மற்றவர்களால் மூகாம்பிகா என அழைத்து ஆசி பெறுகின்றனர்.
அதேநேரம் ஜாம்பவான் மகரிஷி என்பவர் கோலாவின் இயற்கை அழகை கண்டு இங்கு வந்து தவம் செய்ய முயல்கிறார்.
அப்போது சிவனை நோக்கி தவம் செய்யும்போது அவர் முன் வந்து ஆசி வழங்குகிறார்.
அவர் தங்களை பூஜை செய்ய உருவம் வேண்டும் என்றபோது லிங்க பிரதிஷ்டை செய்யகூறுகிறார்.
ஆனால் அம்பாளுடன் உடன் இருப்பது போல் பூஜிக்க வேண்டும் என எண்ணுகிறார்.
அவரின் ஆசைப்படி மாயசக்தியான மூகாம்பிகா உருவத்தை அவருக்கு காட்டுகிறார்.
சிவனும் சக்தியும் அதில் இருப்பதை உணர்ந்து அவ்வுருவத்தை கொண்டு வழிபாடு நடத்தி வருகிறார்.
- முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
- திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும்.
பழனி:
பழனி அறுபடை வீடுகளின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி விழா நவ.2-ம் தேதி மலைக்கோவிலில் உச்சி காலத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து 3.10 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் சன்னதி அடைக்கப்படும்.
அன்று மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடைபெறும்.
அதனை தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும். அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனுசு லக்னத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை, சண்முக திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 8.20 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரம் காரணமாக நவ.7-ம் தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
- முன்வினைப் பயனால் தான் துன்பம் ஏற்படுகிறது.
- மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது.
நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும் போது நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்கு பழி வாங்கத்துடிக்கிறோம். ஆனால் அது தவறான செயல்.
நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால் அதற்கு காரணம் நாம் முன் செய்த வினைப்பயன் தான். எனவே நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும் போது நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும், பழிக்கு பழி வாங்க நினைக்காமலும், பொறுத்துக்கொள்ள வேண்டும்.
அசோகவனத்தில் சீதை இருந்த போது சீதையை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம் தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.
ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு அசோகவனத்தில் இருந்த சீதா தேவியிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், சீதா தேவையை வணங்கி `தாயே ஸ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்' என்று கூறினார்.
அனுமன் கூறுயதை கேட்டு மகிழ்ந்த சீதை `அனுமனே நான் முன்பொரு நாள் உயிர் துறக்க நினைத்த நேரத்தில் நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போது ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்கு தெரிவித்தாய்.
ஏற்கனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்றாள்.
அதற்கு அனுமன், `தாயே எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்று தான். கடந்த பல மாதங்களாக உங்களை பாடாய் படுத்திய இந்த அரக்கிகளை நான் தீயில் இட்டு கொளுத்த வேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும்' என்று அனுமன் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனை பார்த்து `அனுமனே நீ நினைப்பது போல் இந்த அரக்கிகள் என்னை துன்புறுத்தி இருந்தாலும் அதற்கு இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை.
நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்கு காரணம் நான் முன்பு செய்த செயலின் விளைவுதான். பொன் மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு அதை பிடித்து வர கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், `லட்சுமணா, லட்சுமணா என்று அபயக்குரல் எழுப்பியதாலும் பயந்துபோன நான் எனக்கு காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பி பார்க்க சொன்னேன்.
அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனை கண்டித்து பேசினேன். ஒரு பாவமும் அறியாமல் இரவும் பகலுமாக எங்களை கண் இமைப்போல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியது தான் இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்கு காரணம்.
எனவே நீ அரக்கிகளை ஒன்றும் செய்துவிடாதே, அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள். அவர்களூக்கு தீங்கு செய்து நீ பெரும் பாவத்தை தேடிக்கொள்ளாதே என்று கூறினார். அனுமன் உண்மையை புரிந்து கொண்டார்.
நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் நாம் முன் செய்த தீவினை பயன் தான் காரணம்.
இதை தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது.
சிறு வயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லை செருகியதால் பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார்.
மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது சிறுவயதில் அவர் தும்பியை துன்புறுத்தியது தான் காரணம் என்று கூறியது.
எனவே நமக்கு ஒருவர் துன்பம் விளைவித்தாலும் நம்மை ஒருவர் பழித்துப் பேசினாலும் அதற்கு காரணம் நாம் செய்த வினைப்பயன் தான் என்பதை உணர்ந்து நாம் பதிலுக்கு அவரை பழிதீர்க்க நினைக்க கூடாது.
- இரவு 8 மணிக்கு மேல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
- இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும், இன்றும் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இருப்பினும் நேற்று மாலையில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
இருப்பினும் மழையின் காரணத்தினால் வழக்கத்தை விட கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
- 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- நாளை வரை நிறைமணி காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.
திருவேற்காடு:
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் நிறைமணி காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் நேற்று முதல் 3 நாட்கள் நிறைமணி காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கோவில் கருவறை மற்றும் முன்பகுதியில் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பந்தல் முழுவதும் தோரணமாக கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.
இந்த தோரணங்களை பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், மழை பெய்து செழிக்கவும், ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும்.
இயற்கை வளங்கள் பெருக வேண்டும். விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது.
சுமார் 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளன. நாளை (வெள்ளிக்கிழமை) வரை இந்த நிறைமணி காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.
கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.
இதையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. நிறைமணி காட்சி பார்ப்பதற்கு தொங்கும் தோட்டம் போல் காட்சி அளித்தது.
பக்தர்கள் நிறைமணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
- வருகிற 21-ந் தேதி வரை சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
திருவனந்தபுரம்:
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு பிரம்மதத்தன், கண்டரரு ராஜீவரு ஆகியோர் தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
அதைதொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 21-ந் தேதி வரை நடை திறந்து ஐப்பசி மாத சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். முன்னதாக இன்று காலை சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு குலுக்கல் மூலம் நடைபெறுகிறது.
சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகளுக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். மறுநாள் 31-ந் தேதி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டலகால பூஜைகளுக்காக அடுத்த மாதம் 15-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.
- இன்று பவுர்ணமி.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-31 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி மாலை 5.25 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: ரேவதி மாலை 5.36 மணி வரை பிறகு அசுவினி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பவுர்ணமி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் உற்சவம் ஆரம்பம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சலில் காட்சி. தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப் பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. குறுக்குதுறை ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. சோழவந்தான் அருகில் ஸ்ரீ குருவித்துறை குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-போட்டி
கடகம்-ஆசை
சிம்மம்-விவேகம்
கன்னி-ஆக்கம்
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-நற்செயல்
தனுசு- வரவு
மகரம்-புகழ்
கும்பம்-சுபம்
மீனம்-பயணம்
- தங்களுடைய விருப்பம் நிறைவேறியபின் பக்தர்கள் இந்த நரசிம்ம சுவாமிக்கு தைலம், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள்.
- பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், சந்தனம் மேலும் வஸ்திரம் முதலியவற்றை நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்கின்றார்கள்.
வசந்தராஜன் என்ற அரசன் விருத்தாசலத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.
அவன் ஒரு நரசிம்மர் கோவிலைக் கட்ட விரும்பினான். வசந்தராஜனுக்கு பரகாசுரன் என்ற அரக்கன் பல தொல்லைகளை செய்து வந்தான்.
அவன் அரக்கன் இரண்யகசிபுவின் உறவினன்.
இந்த தொல்லைகளிலிருந்து விடுபட வசந்தராஜன் கடும் தவம் புரிந்தான். நரசிம்ம மூர்த்தி அவனுடைய தவத்தை மெச்சி அந்த அசுரனைக் கொன்றார்.
அந்த அசுரனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்ரரூபத்தைக் கண்டு அஞ்சி வசந்தராஜன் ஸ்ரீலட்சுமித் தாயாரிடம் பகவானை சாந்தப்படுத்தும்படி வேண்டினான்.
ஸ்ரீலட்சுமி தாயாரின் அரவணைப்பால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்தமாகி தன்னுடைய கொடூரமான முக பாவத்தை மாற்றிக் கொண்டு ஸ்ரீகனகவல்லித் தாயாரை தன்னுடைய மடியில் வீற்றிருக்கும்படி செய்தார்.
அதோடு வசந்தராஜனுக்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்த மூர்த்தியாகக் காட்சியளித்தார்.
தேவர்களும், முனிவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
இதனால் வசந்தராஜன் ஸ்ரீநரசிம்ம சுவாமியிடம் இங்கேயே தங்கும்படி வேண்டினான்.
அந்த அசுரனின் பெயரால் இந்த இடம் "பரிக்கல்புரம்" என்றாகிப் பிறகு நாளடைவில் பரிக்கல் எனப்பட்டது.
மகாலட்சுமியின் அன்பான அரவணைப்பால் பகவான் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி தன் கோபத்தைத் தணித்து சாந்த மூர்த்தியான இடம் இதுவாகும்.
இங்கு மகாலட்சுமி அவளுடைய வலது கரத்தால் சுவாமியை தழுவியும், பகவான் தன்னுடைய இடது கரத்தால் தாயாரை அரவணைத்தும் சேவை சாதிக்கிறார்.
இந்த கோவில் முதலில் சிவப்பு செங்கற்களாலும், சுண்ணாம்பு மற்றும் மரத்தாலும் கட்டப்பட்டிருந்தது.
முஸ்லிம்களின் படையெடுப்பால் இக்கோவில் மிகவும் சிதைந்து போய், சிதிலமடைந்து அழிந்து போய் விட்டது.
கர்நாடக அரசன் நரசிம்மன் என்பவன் இத்திருக்கோவிலை மறுபடியும் கறுப்பு பளிங்கு கற்களால் கட்டினான்.
இப்பொழுதும் மாத்வ மதத்தைச் சேர்ந்த கர்நாடக மாநிலத்தவர்கள் பரிக்கல் நரசிம்ம சுவாமியை தங்களுடைய குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.
கிராமத்தின் நடுவில் இக்கோவில் உள்ளது. ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். ஸ்ரீகனகவல்லி தாயாரைத் தம்முடைய மடியில் இருத்திக் கொண்டுள்ளார்.
இவர் சுயம்பு மூர்த்தியாவார். ஸ்ரீவியாசராயர் ஆஞ்சநேயரின், 732 சிலைகளை தென் இந்தியாவில் நிறுவினார். அவற்றில் இங்குள்ள ஆஞ்சநேயரும் ஒருவராவார்.
சிறந்த வேலை, உயர்ந்த பதவியை அடைய விரும்புகிறவர்களுக்கு ஸ்ரீபரிக்கல் நரசிம்மர் நிச்சயம் பேரருள் புரிகின்றார்.
தங்களுடைய விருப்பம் நிறைவேறியபின் பக்தர்கள் இந்த நரசிம்ம சுவாமிக்கு தைலம், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள்.
பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், சந்தனம் மேலும் வஸ்திரம் முதலியவற்றை நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்கின்றார்கள்.
சில நேரங்களில் தங்களுடைய முடியையும் காணிக்கையாகக் கொடுக்கின்றார்கள்.
அவர்கள் பெரிய விளக்கு, மாவிளக்கு (அதாவது அரிசி மாவு, நெய் முதலியவற்றை கலந்தது) ஏற்றி பெருமாளுக்குப் பூஜை செய்வார்கள்.
மேலும் சில பக்தர்கள் காதுகுத்தல், அங்கபிரதட்சணம் (அதாவது ஈரத்துணியுடன் பிரகாரத்தில் உருண்டு பிரண்டு அங்கபிரதட்சணம்) செய்வார்கள்.
ஸ்ரீபரிக்கல் நரசிம்ம சுவாமிக்கு எப்பொழுதெல்லாம் அபிஷேகம் செய்யப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கும், கனகவல்லித் தாயாருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 21 கி.மீ. தொலை தூரத்தில் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.
இந்த புனிதமான இடம் இரண்டு நதிகளுக்கு இடையில் (தென்பெண்ணை, கடிலம் ஆறுகளுக்கு) அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் போல் இந்த இடமும் சிறப்பு மிகுந்தது.
- மலை மீது இறைவனை தரிசிக்கும்போது மனமும் உடலும் தூய்மை அடைகிறது.
- பில்லி சூனிய பீடைகள் அகன்று உடலில் உள்ள துர்நீர் உதிர்ந்து ஆரோக்கியமான உடம்பும் மீண்டும் கிடைக்கிறது.
கலியுகத் தொடக்கத்தில் பேய், பிசாசு போன்றவற்றின் தொல்லைகளில் மக்கள் நிம்மதி இழந்தனர்.
அவர்களிடம் இரக்கம் கொண்ட பிரம்மன், பிரம்ம தீர்த்தக் கரையில் தவம் இருந்தார். அவர் முன்பு நரசிம்மர் தோன்றி "பிரம்மா! உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்.
"மக்கள் நோய் நொடியின்றியும் பேய், பிசாசு தொல்லை இன்றியும் வாழ அருள வேண்டும்" என்று பிரம்மா கேட்டுக் கொண்டார்.
பிரம்மனுக்கு படைப்புத் தொழிலை யாதொரு இடையூறின்றி பண்ண நரசிம்மர் பணிந்தார்.
ஆஞ்சநேயருக்கு தம் சங்கு, சக்கரங்களை அளித்து எதிரே உள்ள சிறிய மலையிலிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் விருப்பங்களை, நிறைவேற்றுமாறும் அங்கேயே நித்தியவாசம் புரியமாறும் கட்டளையிட்டார்.
சப்தரிஷிகளும் வாமதேவர் என்ற முனிவரும் பிரகலாதனுக்காக பெருமாள் காட்டிய நரசிம்ம அவதாரத்தை தங்களுக்கும் காட்ட வேண்டும் என்றும் இந்த மலையில் வந்து தவம் இருந்தனர்.
அப்போது கும்போதிர கால்கேயர் எனும் அரக்கர்கள தவத்திற்கு இடையூறு செய்தனர்.
அப்போது அரக்கர்களால் வரும் இடையூறுகளை அழிப்பதற்கு நரசிம்மர், ஆஞ்சநேயரை இந்த மலைக்கு அனுப்பி வைத்தார்.
நரசிம்மர் வழங்கிய சங்கு, சக்கரங்களை பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் அரக்கர்களின் தலைகளைக் கொய்தார்.
ரிஷிகளுக்கு நரசிம்ம அவதாரத் தோற்றத்தை மீண்டும் காண்பித்தார் பெருமாள்.
மலை மீது இறைவனை தரிசிக்கும்போது மனமும் உடலும் தூய்மை அடைகிறது.
பில்லி சூனிய பீடைகள் அகன்று உடலில் உள்ள துர்நீர் உதிர்ந்து ஆரோக்கியமான உடம்பும் மீண்டும் கிடைக்கிறது.
படியேறி வழிபடும் அளவுக்கு உடல் உரம் இல்லாத முதியவர்கள் கீழிருந்து திருக்கடிலையும் பெருமாளையும் ஆஞ்சநேயரையும் மனதில் நினைத்தாலே போதும், மோட்சம் கிட்டும்.
வருடம் முழுவதும் விழாக்கோலம் கொள்கிறது சோளிங்கர்.
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், அலை, அலையாக மக்கள் வந்து வணங்கும் சோளிங்கருக்கு நீங்களும் போய் உரிய முறையில் வழிபாடுகள் செய்து பேய், பில்லிசூனியம் அகன்று உடலும் மனதும் ஆரோக்கியம் அடைந்து வாழ்வில் மேன்மைகள் பெறலாம்.
- பெருமாள் வலப்புறம் உள்ள ஐம்பொன்னாலான கிருஷ்ணன் விக்ரகம் கண்ணையும் கருத்தையும் கவரும்.
- கருவறையைச் சுற்றி வரும்போது ஆண்டாள் சன்னதியைக் காணலாம்.
இது நீள் சதுர வடிவில் உள்ளது. கோவிலின் முன் தேர் ஒன்று எழிலுற நிற்கிறது. கோவிலின் தோரண வாயிலில் பலி பீடம்.
அதன் அருகே அமைந்த மேடையில் பெருமாள் பாதங்கள் உள்ளன. வலப்புறத்தில் மடைப்பள்ளி.
அதன் எதிரே அமைந்த மண்டபத்தில் தான் இராபத்து பகல்பத்து விழா நடைபெறும்.
பெருமாள் சன்னதிக்கு பின் ஆதிகேசவ பெருமாள் சன்னதி உள்ளது. எதிரே பெரிய வடிவில் கல்லில் வடித்த கருடன்.
கருவறை முன் நின்ற நிலையில் துவார பாலகர்.
ரங்க மண்டபம் என்னும் மகா மண்டபத்தைக் கடந்ததும் பக்தோசித சன்னதி சடகோபன் என்னும் பெருமாள் திருவடி நிலை ஆதிசேஷன் வடிவில் அமைந்திருப்பது இத்தலத்தில் தான்.
பெருமாள் வலப்புறம் உள்ள ஐம்பொன்னாலான கிருஷ்ணன் விக்ரகம் கண்ணையும் கருத்தையும் கவரும்.
கருவறையைச் சுற்றி வரும்போது ஆண்டாள் சன்னதியைக் காணலாம்.
தீர்த்தங்கள்
பிரம்ம தீர்த்தம், பைரவ கலாவர்த்த தீர்த்தம், கவுதம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், வராக தீர்த்தம், அனுமத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம் போன்ற தீர்த்த நிலைகள் இருக்கின்றன.
இதில் நீராடினால் பாவம் தொலையும், நன்மை விளையும். அகத்தியர் முதலிய பெரிய மகான்கள் நீராடிய புண்ணிய தீர்த்தங்கள் இவை.
- பில்லி சூனியம், தீராவினை, மனக்குறை ஆகியவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து சேவை புரிந்தால் துயரம் சூரியனைக் கண்ட பனிபோல் கரையும்.
- புராணத்திலேயே இந்த தலம் காசி, கயைக்கு நிகரானது என்று போற்றப்பட்டுள்ளது.
ஒருநாள் தங்கி இருந்தாலே மோட்சம் தரக்கூடியது கடிகாசலம் என பெயர் கொண்டு விளங்கும் சோளிங்கர் திருத்தலம்.
பன்னிரு ஆழ்வார்களில் பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆசாரியார்களில் ஸ்ரீமந்தநாத முனிகள், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ ராமானுஜம், மணவாள மாமுனி போன்றோர் மங்களா சாசனம் செய்த பெருமையும் பெற்ற ஸ்தலம் இது.
அமைவிடம்
சென்னை & பெங்களூர் ரெயில் வழியில் அரக்கோணத்தில் இருந்து மேற்கே 27 கிலோ மீட்டர் தூரத்திலும் சென்னை & திருப்பதி ரெயில் மார்க்கத்தில் திருத்தணியில் இருந்து 27 கிலோ மீட்டர் மேற்கிலும் அமைந்துள்ளது.
வேலூரில் இருந்தும் சித்தூரில் இருந்தும் பஸ் வசதிகள் அதிகம்.
மலை அளவு
சோளிங்கர் என்று அழைக்கப்பட்டாலும் இதன் தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் கொடைபாளையம் என்கிற சிறு கிராமத்தில் தான் பெரியமலையும் சிறிய மலையும் அமைந்துள்ளது.
பெரிய மலையில் யோக நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.
மலையின் நீளம் 200 அடி. அகலம் 150 அடி. உயரம் 750 அடி. கோவில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. நீளம் 150 அடி. அகலம் 250 அடி. உயரம் 250 அடி. மொத்தம் 406 படிக்கட்டுகள். பரப்பளவு 1 ஏக்கர்.
ஊர் திருக்கோவில் அமைந்துள்ள இடத்தின் நீளம் 300 அடி, அகலம் 150 அடி.
பரப்பளவு இரண்டரை ஏக்கர், யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ பெருமாள் கோவில் சோளிங்கர் ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
முதன் முதலில் பெருமாள் கோவிலின் பிரதிஷ்டை காலம் கி.பி. 1588.
தலச் சிறப்பு
பில்லி சூனியம், தீராவினை, மனக்குறை ஆகியவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து சேவை புரிந்தால் துயரம் சூரியனைக் கண்ட பனிபோல் கரையும்.
புராணத்திலேயே இந்த தலம் காசி, கயைக்கு நிகரானது என்று போற்றப்பட்டுள்ளது.
ஊர் பெருமாள் கோவிலில் பாரிஜாத மரம் ஒன்றும் முன்பு இருந்தது, சிறிய மலையில் அசோக மரம் உள்ளது.
அதன் கீழே குளம் அமைந்துள்ளது. பெரிய மலையில் உள்ளே நுழையும் போது அழகிய கோபுரம் நம் விழிகளை அகல விரிக்க வைக்கும்.
- மலை சுற்றுவதை பாதி வழியில் இருந்து தொடங்கவோ, பாதி வழியில் முடிக்கவோ கூடாது.
- மிக வேகமாக கிரிவலம் வருதல் கூடாது. மெதுவாக சாதாரணமாக நடக்க வேண்டும்.
மலையே இறைவனாக அமைந்து உள்ளதால் மலையைச்சுற்றும் பக்தர்கள் சில முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
கிரிவலம் செல்லும் தினத்தில் குளித்து விட்டு நெற்றியில் திருநீறு அணிந்து செல்ல வேண்டும்.
சிவனின் நாமத்தையோ அல்லது பக்திப் பாடல்களையோ பாடிக் கொண்டே செல்ல வேண்டும்.
மிதியடி அணிந்து மலை சுற்றக் கூடாது. வெயில், மழைக்கு குடையை பயன்படுத்தக் கூடாது.
மலை சுற்ற வாகன துணையை நாடக் கூடாது.
இடமிருந்து வலமாக மட்டுமே மலை வலம்வர வேண்டும்.
கோபம் முதலான உணர்ச்சி நிலைகளை மலைச்சுற்றும் போது தவிர்த்தல் வேண்டும்.
அருணாசலலேஸ்வரர் கோவிலின் கிழக்கு வாசலுக்கு வெளியில் இருந்து மலை சுற்று தொடங்க வேண்டும்.
எந்த இடத்தில் தொடங்கினோமோ அந்த இடத்தில் முடிக்க வேண்டும்.
கிரிவலப்பாதையில் செங்கம் சாலை பிரியும் இடத்திற்கு அருகே நந்திகேசுவரர் சன்னதி உண்டு.
கிரிவலம் செல்வோர் இந்த சன்னதிக்கு கட்டாயம் சென்று வணங்குவது சிறப்பாகும்.
இறைவன் அனுப்பிய அதிகாரமூர்த்தியாக அங்கிருந்து பக்தர்களுக்கு உதவுகிறார்.
மலை சுற்றுவதை பாதி வழியில் இருந்து தொடங்கவோ, பாதி வழியில் முடிக்கவோ கூடாது.
மிக வேகமாக கிரிவலம் வருதல் கூடாது. மெதுவாக சாதாரணமாக நடக்க வேண்டும்.
வழியில் பல மூலிகைகள் உள்ளதால் மூலிகை காற்றும் நம் மீது பட வேண்டும்.
அதனை முகர்ந்து கொண்டு செல்வது சிறப்பாகும். மலை சுற்றுவதை ஒரு தியானத்தை போல நிதானமாக மேற்கொள்ள வேண்டும்.
இடது ஒரமாகவே நடந்து செல்ல வேண்டும். தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், மறைந்த ஞானிகளும் அருவமாக மலை சுற்றுவதால் அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இடது ஒரமாக நாம் மலை சுற்றுதல் வேண்டும்.
பேசிக் கொண்டு வராமல் தேவ நாமத்தை சொல்லிக்கொண்டு வருதல் நலம்.
அண்ணாமலையாருக்கு அரோகரா என்று இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு செல்லலாம்.
முக்கியமாக மலை சுற்றுவோர், வழியில் எங்கும் உட்கார்ந்து ஒய்வெடுத்தல் கூடாது, இதை தவிர்க்க வேண்டும்.
வழியில் உள்ள சன்னதிகள், லிங்கங்கள் ஆகியவற்றை வணங்க வேண்டும்.
அடிக்கடி மலையை பார்த்தவாறு வணங்கி செல்வது சிறப்பாகும்.
முக்கிய இடங்களில் மலையை நோக்கி கீழே விழுந்து நமஸ்காரம் செய்வது மிகவும் சிறப்பு.
மலை சுற்றுவோர் அதனை முடிக்கும் போது ஈசானியம் வழியாகத்தான் வந்து முடிக்க வேண்டும்.
மலை சுற்றி முடிந்ததும் அருணாசலேஸ்வரரை வணங்கிய பின்னரே திரும்புதல் வேண்டும்.
மலை சுற்றி முடித்தவுடன் தூங்கக் கூடாது. குளிக்கவும் கூடாது.
குறிப்பாக தன்னந்தனியாக மலை சுற்றுவது மிகவும் நல்லது. ஏனெனில் அது மவுனத்தை ஏற்படுத்தும்.
தெய்வீக தரிசனம் சிதையாது செல்வதற்கு உதவும். ஒருமித்த சிந்தனையை உண்டாக்கும்.
மலைவலம் சென்று சிவனின் அருளை பெறுவோம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்