என் மலர்
ஆன்மிகம்
X
விசாலாட்சி விநாயகர் கோவிலில் இன்று காலை நடந்த சங்கடஹர சதுர்த்தி விழா
Byமாலை மலர்23 July 2016 9:19 AM IST (Updated: 23 July 2016 9:19 AM IST)
மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் இன்று சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்றுப் பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் திருக்கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் சங்கரடஹர சதுர்த்தி இன்று (23-ந்தேதி) காலை 5.30 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது..
பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

Next Story
×
X