search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு பகவானுக்கு தங்க கவச அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிப்பதை படத்தில் காணலாம்.
    X
    ராகு பகவானுக்கு தங்க கவச அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிப்பதை படத்தில் காணலாம்.

    திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா: சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்

    திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நடந்தது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலமான நாகநாதசாமி கோவில் உள்ளது. ராகுபகவான், சிவபெருமானை பூஜித்த தலமான இந்த கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் தனது இருதேவியருடன் எழுந்தளியுள்ளார். இத்தலத்தில் உள்ள ராகு பகவானின் மேனியில்(உடம்பில்) பாலாபிஷேகம் செய்யும்போது பாலானது, நீலநிறமாக மாறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

    சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ராகு பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெறும். நேற்று மதியம் 2.16 மணிக்கு ராகுபகவான், மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி இந்த கோவிலில் கடந்த 30-ந் தேதி மாலையில் முதல் கால யாகபூஜை தொடங்கியது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தன.

    நேற்று காலை 10 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்று மதியம் 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. சந்தன அபிஷேகத்தை தொடர்ந்து யாகசாலையில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கட அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து நாககன்னி நாகவள்ளி உடனாய ராகு பகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளை உமாபதி, சங்கர், சரவணன், ஸ்ரீதரன், செல்லப்பா, ராஜேஷ் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

    சமூக இடைவெளியுடன்...

    விழாவில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×