என் மலர்
வழிபாடு

திருப்பதியில் இன்று முதல் 5 நாட்கள் தெப்ப உற்சவம்

- இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
- தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்ப திருவிழா இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
இதற்காக பல்வேறு வகையான மலர்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரம் செய்து தெப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இன்று மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் அங்குள்ள கோவில் புஷ்கரணியில் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் கோவிலில் நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளும், 11, 12, 13 ஆகிய தேதிகளில் ஆர்ஜீத சேவைகள் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் நேற்று 74,646 பேர் தரிசனம் செய்தனர். 30 769 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ 3.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.