என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் பவனி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் பவனி](https://media.maalaimalar.com/h-upload/2023/07/17/1916455-kanchipuram.webp)
X
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் பவனி
By
மாலை மலர்17 July 2023 8:03 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு உகந்த ஆடி மாத பிறப்பையொட்டி தங்கத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிகப்பு நிற பட்டு உடுத்தி மல்லிகைப்பூ, சம்பங்கி பூ மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்து செல்ல காஞ்சீபுரம் காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தங்கத்தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
X