search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    • விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை நடக்கிறது.
    • 6-ந்தேதி அன்னையின் தேர்பவனி திருவிழா கொடியிறக்கம் நடக்கிறது.

    மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவையொட்டி நேற்று(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கல்லறை மந்திரிப்பு, 6.30 மணிக்கு ஆலய பங்குதந்தை ஜோசப் அருள் ஸ்டாலின் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார்.

    விழாவின் முதல்நாளான இன்று காலை திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். செட்டிச்சார்விளை அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி காலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி ஜெபமாலை, முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு மறைமாவட்ட செயலாளர் கிளாட்ஸ்டன் ஜெபமாலை, சிறப்பு புகழ்மாலையை நிறைவேற்றுகிறார். வட்டம் அருட்பணியாளர் சகாயதாசு மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 6-ந்தேதி காலை 7 மணிக்கு குருகுல முதல்வர் அருட்பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். கோட்டார் மறைமாவட்ட முதல்வர் ஆன்றணி சகாய ஆனந்த் மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு அன்னையின் தேர்பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், திருவிழா கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு இறைஞர் மன்ற ஆண்டு விழா, இன்னிசை விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மறவன்குடியிருப்பு ஊர் தலைவர் ஆன்றணி எட்வின், செயலாளர் பால் வின்ஸ்டன், துணை செயலாளர் கிறிஸ்ல்டா, பொருளாளர் ஆரோக்கிய வினோத், பங்குதந்தை, பங்கு அருட்பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×