என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![குன்றத்தூர் முருகன் கோவிலில் 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூரசம்ஹாரம் குன்றத்தூர் முருகன் கோவிலில் 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூரசம்ஹாரம்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/04/1960638-10.webp)
குன்றத்தூர் முருகன் கோவிலில் 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூரசம்ஹாரம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- குன்றத்தூரில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
பூந்தமல்லி:
குன்றத்தூரில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டு மின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
ஆண்டு தோறும் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூரகம்ஹாரம் நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படாமல் இருந்தது.
பிரசித்தி பெற்ற மற்ற முருகன் கோவில்களில் சூர சம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப் படும் போது குன்றத்தூரில் உள்ள முருகன்கோவிலில் இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது பக்தர்களுக்கு பெரும் குறையாக இருந்தது. கடைசியாக கடந்த 1969-ம் ஆண்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களுக்காக சூரசம்ஹாரம் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குன்றத் தூர் முருகன் கோவிலில் புதிதாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சூரசம்ஹாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அறங் காவலர் குழு ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்த ஆண்டு முதல் குன்றத் தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இதைத் தொடர்ந்து சூரசம்ஹாரத் தின் போது இருக்க வேண்டிய சாமி சிலைகளை புதுப்பிக்கும் பணிக்காக அவற்றை வாகனங்களில் எடுத்து செல்லும் பணி நடந்தது.
குன்றத்தூர் முருகன் கோவிலில் சுமார் 54 ஆண்டு களுக்கு பிறகு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படுவது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெறும் எனவும் தெரி விக்கப்பட்டு உள்ளது.