search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 10,258 கிலோ தங்கம், ரூ.15,938 கோடி ரொக்கம் வங்கியில் டெபாசிட்
    X

    ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 10,258 கிலோ தங்கம், ரூ.15,938 கோடி ரொக்கம் வங்கியில் டெபாசிட்

    • 2019-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி ரூ.13,025 கோடி ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.
    • திருப்பதி கோவில் சொத்து மதிப்பு ரூ.2.3 லட்சம் கோடியாக உள்ளது.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் பணம், தங்கத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்கிறது. ஆனால், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் என்ற பெயரில் மாநில அரசிடம் தங்கத்தை அடகு வைப்பதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

    இதற்கு பதிலளித்த தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மீது யாரோ சிலர் தவறான செய்தியைப் பரப்புவது ஏற்றதல்ல என்று எச்சரித்தார்.

    தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தங்கம் மொத்தம் 10,258.37 கிலோ கிராம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் ஏழுமலையானின் ரொக்க டெபாசிட் வெகுவாக அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி ரூ.13,025 கோடி ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ரூ.15,938 கோடி ரொக்கம் டெபாசிட் உள்ளது.

    2019-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி தங்கம் கையிருப்பு 7,339.74 கிலோ கிராமாக இருந்தது. ஆனால் இப்போது அது 10,258.37 கிலோ கிராமாக உள்ளது என்றார்.

    மேலும், ஏழுமலையானின் தங்க நகைகள் மற்றும் ரொக்கம், அதிக வட்டி தரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் சாமியின் பணம் மற்றும் தங்க நகைகளை தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்ய மாட்டோம் எனத் தெரிவித்தார்.

    Next Story
    ×