என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![திருப்பதியில் இன்று அங்கபிரதட்சண டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு திருப்பதியில் இன்று அங்கபிரதட்சண டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு](https://media.maalaimalar.com/h-upload/2022/07/20/1732595-tirupati.jpg)
திருப்பதியில் இன்று அங்கபிரதட்சண டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தற்போது பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.
- தினமும் 750 பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்யும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2 மணிக்கு பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுவர். சுப்ரபாத சேவையின்போது அவர்கள் ஏழுமலையானை தரிசித்து விட்டு வெளியே வருவார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கோவில் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்க பிரதட்சணமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இதற்கும் ஆன்லைன் முறையை தேவஸ்தானம் கையாண்டு வருகிறது. இதற்கான டோக்கன்கள் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்பட்டது.
வரும் ஆகஸ்ட் மாதம் அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை இணைத்து டோக்கனை பெற்றனர். தினமும் 750 பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்யும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அபிஷேகம் நடப்பதால் அன்று மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 74,503 பேர் தரிசனம் செய்தனர். 30,884 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.42 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.