search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-0 என ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ
    X

    பந்தை தடுக்கும் முயற்சியில் வீரர்கள்

    பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-0 என ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

    • ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.

    தோகா:

    கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் மொராக்கோ, ஸ்பெயின் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. எனவே முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் இரு அணியும் 0 - 0 என சமனிலை வகித்தது.

    இதையடுத்து, கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.

    இறுதியில், மொராக்கோ அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    Next Story
    ×