என் மலர்
கால்பந்து
X
உலக கோப்பை கால்பந்து - கத்தாரை 2-0 என வீழ்த்தியது நெதர்லாந்து
Byமாலை மலர்29 Nov 2022 10:27 PM IST
- முதல் பாதியில் நெதர்லாந்து அணி ஒரு கோல் அடித்தது.
- கத்தார் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
தோகா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் நெதர்லாந்து, கத்தார் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் பிரெங்கி டி ஜாங் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில், நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வென்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடமும் பிடித்தது.
கத்தார் அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.
Next Story
×
X