என் மலர்
கால்பந்து
உலக கோப்பை கால்பந்து- காலிறுதியில் பிரேசிலை வீழ்த்தியது குரோஷியா
- பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 கோல் கணக்கில் குரோஷியா வெற்றி
- உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது பிரேசில்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு 8.30 மணிக்கு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியினான பிரேசில் அணி, குரோஷியாவை எதிர் கொண்டது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்ட நிறைவுவரை இரு அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில் கூடுதல் ஆட்ட நேரத்தின்போது 106 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் கோல் அடித்தார். தொடர்ந்து 117வது நிமிடத்தில் குரோஷியா தரப்பில் புருனோ பெகோவிக் ஒருகோல் அடித்ததால் ஆட்டம் சமனில் ஆடிந்தது. இதையெடுத்து பெனால்டி சூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்திய குரோஷியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.