என் மலர்
பொது மருத்துவம்

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் துரியன் பழம்

- சிங்கப்பூரில் கிடைக்கும் புக்கிட் மேரா என்று அழைக்கப்படும் இனிப்பு மற்றும் கசப்பு சுவை கலந்த சுல்தான் துரியன்.
- துரியன் பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
பழங்களின் ராஜாவாக அறியப்படுவது துரியன் பழம். உலகின் சில நாடுகளில்தான் துரியன் பழங்கள் கிடைக்கின்றன.
சிங்கப்பூரில் கிடைக்கும் புக்கிட் மேரா என்று அழைக்கப்படும் இனிப்பு மற்றும் கசப்பு சுவை கலந்த சுல்தான் துரியன், தாய்லாந்தில் கிடைக்கும் சற்று காரம் மற்றும் இனிப்பு கலந்த மான்தோங் துரியன், மலேசியாவில் பிரபலமான இனிப்பு மற்றும் கிரீம் சுவை கொண்ட கருப்பு முள் துரியன், இந்தோனேசியாவில் பரவலாக கிடைக்கும் இனிப்பு, கசப்பு சுவை கலந்த பச்சை துரியன் உள்ளிட்டவற்றை உதாரணமாக கூறலாம்.
ஆனால், இவை அனைத்தையும் மிஞ்சும் சுவையும் ஊட்டச்சத்துக்களும் நிரம்பியது தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கிடைக்கும் துரியன் பழங்கள்.
இந்த பழங்களில் மற்ற துரியன் பழங்களை விட சுவை மற்றும் மருந்துவ குணங்கள் அதிகம் இருக்க காரணம், மேற்கு தொடர்ச்சி மலையின் மண் வளமும், தண்ணீர் வளமும் தான்.
பொதுவாக, துரியனில் வைட்டமின் சி, போலிக் அமிலம், தியாமின், ரிபோப்ளேவின், நியாசின், பி-6 மற்றும் வைட்டமின்-ஏ போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன, அத்துடன் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளன. இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சோடியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ், பைட்டோ கெமிக்கல்கள், நீர், புரதம் மற்றும் நன்மை பயக்கும் நார்ச்சத்து போன்றவை உள்ளன.
துரியன் பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. நோய்களை தடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இருப்பினும் ரத்த சர்க்கரை அளவு அதிகம் இருக்கும் நீரிழிவு நோயாளிகள் துரியன் பழங்களை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். சோகையை நீக்குகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுவோர் சீசனில் கிடைக்கும் துரியன் பழங்களை உண்டு வந்தால் விரைவில் இயற்கையான தூக்கத்தை பெறலாம். மேலும், குற்றாலம் துரியன் பழங்கள் குழந்தை பேறு உருவாக்கும் சக்தியை ஊக்குவிப்பதாக நம்பப்படுகிறது. மொத்தத்தில் சொல்வது என்றால், குற்றாலம் துரியன் பழங்கள் இயற்கையின் கொடை ஆகும்.