search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    ஆண்களை அதிர வைக்கும் `ப்ராஸ்டேட் வீக்கம்... குணமாக எளிய மருத்துவமுறை
    X

    ஆண்களை அதிர வைக்கும் `ப்ராஸ்டேட் வீக்கம்'... குணமாக எளிய மருத்துவமுறை

    • மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது.
    • ப்ராஸ்டேட் சுரப்பி சிலபேருக்கு வீங்கி பெரிதாவதுண்டு.

    ஆண்களுக்கு மட்டுமே உள்ள கிளாண்ட் (சுரப்பி) 'ப்ராஸ்டேட்' ஆகும். இதை தமிழில் 'சுக்கிலச் சுரப்பி' என்றும் அழைப்பதுண்டு. ஒரு பாதாம் கொட்டையின் அளவுள்ள இந்தச் சுரப்பி, ஆண்களின் அடிவயிற்றில் மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது.

    எப்படி வயதானால் தலை முடி நரைக்க ஆரம்பிக்கிறதோ, அதுபோல ஆண்களுக்கு வயது ஆக ஆக இந்த ப்ராஸ்டேட் சுரப்பி சிலபேருக்கு வீங்கி பெரிதாவதுண்டு.


    இளம் வயதில் சிலபேருக்கு இந்த சுரப்பி வீங்கி வலியை உண்டு பண்ணும். இது பெரும்பாலும் சிறுநீர்ப்பை நோய் தொற்றால் ஏற்படுவதாகும். தகுந்த சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும்.

    நடுத்தர வயதுக்காரர்கள் சிலபேருக்கு சுரப்பி சற்று பெரிதாகி வீங்குவதுண்டு. இதற்கும் தகுந்த சிகிச்சை எடுத்தால் குணமாகிவிடும்.

    வயதான காலத்தில் தான் ப்ராஸ்டேட் சுரப்பி வீங்கினால் பிரச்சினைகள் அதிகமாகி, அதிக தொந்தரவைக் கொடுப்பதுண்டு. உடனே கவனித்து தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால் சில சமயங்களில் சிலபேருக்கு புற்றுநோயில் கூட கொண்டுபோய் விடுவதுண்டு.

    உங்களுக்கு ப்ராஸ்டேட் இருக்கிறதா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது? முதலில் சிறுநீர் கழிப்பதில் தான் பிரச்சினையே ஆரம்பிக்கும். சிறுநீர் வெளியே வர சில நிமிடங்கள் ஆகும். அடிக்கடி பல முறை சிறுநீர் கழிக்க வேண்டிய பிரச்சினை வரும்.


    சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தவுடனே டாய்லெட்டுக்கு போவதற்குள்ளாகவே சில நொடிகளில் சிறுநீர் வெளியே வந்து ஆடையெல்லாம் நனைந்துவிடும். சிறுநீர் கழித்துவிட்டு வந்தபின்பும் மறுபடியும் போக வேண்டும் என்ற உணர்வு தோன்றும்.

    சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் ஆணுறுப்பில் வலி ஏற்படுதல், சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல், சிறுநீர் கழித்துவிட்டு வந்த பின்னரும் அடிவயிற்றில் இன்னும் நிறைய சிறுநீர் இருக்கிறது போன்ற உணர்வு, தாம்பத்ய உறவில் திருப்தியின்மை, விரைவில் விந்து வெளியேறுதல், விறைப்பு குறைபாடு போன்ற பிரச்சினைகள் காணப்படும்.


    மேற்கூறியவைகளில் நிறைய பிரச்சனை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவச் சிகிச்சையா அல்லது அறுவை சிகிச்சையா என்பதை யூராலஜிஸ்ட் நிபுணர் ஆலோசனையின்படி செய்வது சிறந்தது.

    நன்கு காயவைத்த பூசணி விதைகள் சுமார் 30 தினமும் சாப்பிட்டு வந்தால் ப்ராஸ்டேட் பிரச்சினை ஓரளவு குறையும் என்று சிலர் சொல்வதுண்டு.

    Next Story
    ×