என் மலர்
சமையல்
- புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- நாம் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் மீண்டும் வதக்கவும்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – ½ கிலோ
கடுகு – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – ½ ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்
புளி – ஒரு பெரிய நெல்லிக்கா அளவு
நல்லெணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
கடுகு உளுந்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை – இரண்டு கொத்து
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை
மிளகாய் தூள் – 1½ டேபிள்ஸ்பூன்
பொடி செய்த வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
• சின்ன வெங்காயத்தை நன்கு பொடிதாக நறுக்கி கொள்ளுங்கள்.
• பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ½ டீஸ்பூன் பெருங்காயம் ஆகியவற்றை வருது பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
• புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
• பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெ சேர்த்து சூடுபடுத்தவும்.
• எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
• வெங்காயம் நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
• பிறகு 1½ டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
• பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
• தண்ணீர் அனைத்தும் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது நாம் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் மீண்டும் வதக்கவும்.
• இரண்டு நிமிடம் கழித்து ஓரு ஸ்பூன் இடித்த வெல்லத்தை சேர்த்து கிளறிவிட்டு இரண்டு நிமிடம் வேகவைத்தால் சுவையான வெங்காயம் தொக்கு தயார்.
குறிப்பு: இந்த வெங்காயம் தொக்கு செய்ய சின்ன வெங்காயம் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பெரிய வெங்காயத்தையும் பயன்படுத்தலாம். மேலும் புளி ஊறவைக்கும் போது தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி ஊறவைக்கவும். நிறைய ஊற்றிவிட வேண்டாம்.
- ஒரு கரண்டியினை பயன்படுத்தி கத்தரிக்காவை மசித்து கொள்ளுங்கள்.
- தண்ணீரும் சேர்த்து கையை பயன்படுத்தி நன்றாக கரைத்து விடுங்கள்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்– 1/4 கிலோ
எண்ணெய்- 2 ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன்
பட்ட மிளகாய்- 2
சீரகம்- 1 ஸ்பூன்
பெருங்காய தூள்- 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை- தேவையான அளவு
புளி கரைசல்- 1/2 கப்
வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 2
வெல்லம்- 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை:
* முதலில் கத்தரிக்காயின் மேற்பகுதியில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அடுத்து, அடுப்பை ஆன் செய்து குறைவான தீயில் வைத்து கத்தரிக்காவை சுட்டு எடுத்து கொள்ளுங்கள்.
* பிறகு, சுட்ட கத்தரிக்காவின் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதன் தோலினையும் காம்பினையும் நீக்கி விட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
* இப்போது, ஒரு கரண்டியினை பயன்படுத்தி கத்தரிக்காவை மசித்து கொள்ளுங்கள்.
* நன்றாக மசித்த பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பிறகு, இதனுடன் நச்சு எடுத்த வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
* இந்நிலையில், கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீரும் சேர்த்து கையை பயன்படுத்தி நன்றாக கரைத்து விடுங்கள்.
* இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். பிறகு இரண்டாக நறுக்கிய பட்ட மிளகாய், பெருங்காய தூள் மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
* இப்போது வதக்கிய பொருட்களை எடுத்து தயார் செய்து வைத்துள்ள கத்தரிக்காய் ரசத்தில் சேர்த்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்.
- மாலையில் நன்கு அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- அனைத்து சட்னிகளுடனும், சாம்பாருடனும் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு - 1 டம்ளர்
பச்சரிசி - 1 1/4 டம்ளர்
புழுங்கல் அரிசி - 1 1/4 டம்ளர்
உளுந்தம்பருப்பு- 3/4 டம்ளர்
வெந்தயம் - 1 ஸ்பூன்
செய்முறை:
• மேற்கூறப்பட்ட பொருட்களை கழுவி ஊறவைக்கவும்.
• மாலையில் நன்கு அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
• காலையில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இட்லி ஊற்றி வேக வைக்கவும்.
• மிருதுவான, சுவையான இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்த கேழ்வரகு இட்லி தயார்.
• இது சிறுகுழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
• தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, வேர்க்கடலைச் சட்னி என அனைத்து சட்னிகளுடனும், சாம்பாருடனும் சேர்த்து சாப்பிடலாம்.
- நமக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
- மக்கள் மத்தியில் சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்து மோகம் அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெய் விஷயத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் அனைவரும் சமையலுக்கு குறைந்த கலோரி எண்ணெயை பயன்படுத்துகின்றனர். அந்தவகையில், மக்கள் மத்தியில் சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்து மோகம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஆலிவ் எண்ணெய் சாலட் டிரஸ்ஸிங்கிற்கு பயன்படுத்தப்பட்டது. ஆலிவ் எண்ணெய் நமக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
நிபுணர்களின் கூற்றுப்படி, சமையலுக்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில், நாம் ஆலிவ் எண்ணெயை சூடாக்கும் போது, அது ஸ்மோக் பாயின்ட்டை விட சூடாகும். இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் கலவைகள் தீப்பொறிகளாக உடைகின்றன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களாக மாறி நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க ஆரம்பிக்கின்றன.
இந்த தீவிர கலவைகள் உடலில் உள்ள டிஎன்ஏ, லிப்பிடுகள் மற்றும் புரதங்களுடன் வினைபுரியத் தொடங்குகின்றன. இதனால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருக்கலாம். இதன் காரணமாக, அழற்சி நோய்கள், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.
- அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சில நேரம் கொதிக்க விடவும்.
- அம்புட்டுதான் சுவையான நெத்திலி கருவாடு குழம்பு ரெடி.
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு – 200 கிராம்
கத்தரிக்காய் – 1/4 கிலோ
முருங்கைக்காய் – 2
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 2 (நறுக்கியது)
புளி – 1 எலுமிச்சை அளவு
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைப்பதற்கு:
சின்ன வெங்காயம் – 1 கையளவு
மல்லித் தூள் – 50 கிராம்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2 (காய்ந்த மிளகாய்)
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 4 பற்கள்
துருவிய தேங்காய் – 1/4 கப்.
செய்முறை:
• முதலில் கருவாட்டை வெந்நீரில் ஊறவைத்து சில நேரங்கள் கழித்து கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
• பின்பு கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
• புளியை ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, ஊறியதும் புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.
• ஒரு மண்சட்டியை எடுத்து கொள்ளவும் அவற்றை அடுப்பில் வைத்து மண்சட்டியில் சூடேறியதும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் காய்ந்தமிளகாயை வறுத்து, பின்பு அதனுடன் சின்ன வெங்காயம், மல்லித் தூள், சீரகம், பூண்டு, மிளகு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை வதக்கி ஆறியதும் அதனுடன் தேங்காவை சேர்த்து மிக்ஸி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
• அம்மியில் அரைத்தால் குழம்பு சுவையாகவும், மிகவும் வாசனையாகவும் இருக்கும்.
• பின்பு மற்றொரு மண்சட்டியை அடுப்பில் வைத்து சூடேறியதும் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
• பின்பு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அவற்றில் கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
• காய்கள் நன்றாக வெந்ததும் அவற்றில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சில நேரம் கொதிக்க விடவும்.
• பின்பு கரைத்து வைத்துள்ள புளிச்சாறை சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும். புளிசாறானது நன்கு கொதித்ததும், அதில் நெத்திலி கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
• அம்புட்டுதான் சுவையான நெத்திலி கருவாடு குழம்பு ரெடி.
- பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
- ஃப்ரூட் கஸ்டர்ட்-யை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பால் – 1 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
கஸ்டர்ட் பவுடர் – 1/2 கப்
பழங்கள் – 3 கப்
பாதாம் – 10
பிஸ்தா – 10
முந்திரி – 10
செய்முறை:
• முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 10 பாதாம், 10 பிஸ்தா மற்றும் 10 முந்திரி ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
• பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 1/2 கப் பாலில் இருந்து 1 கப் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள்.
• பிறகு மீதமுள்ள 1/2 கப் பாலில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கப் கஸ்டர்ட் பவுடரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நாம் அடுப்பில் கொதிக்கவைத்துள்ள பாலில் ஊற்றி நன்கு கலந்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
• அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்கு குளிர வைத்து கொள்ளுங்கள்.
• பின்னர் அதில் 3 கப் பழங்கள் மற்றும் நாம் முன்னரே நறுக்கி வைத்துள்ள பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை சேர்த்து அனைவருக்கும் பரிமாறலாம்.
நீங்களும் இந்த ஃப்ரூட் கஸ்டர்ட்-யை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
- விசில் வந்த பிறகு உடனே குக்கரை திறக்காமல் 10 நிமிடம் கழித்து ஆறியதும் குக்கரை திறக்கவும்.
- நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவைத்து ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
உடைத்த கோதுமை - 1 கப்
பாதாம் பருப்பு, முந்திரி திராட்சை - தேவைக்கு ஏற்ப
வெல்லம் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
பால் - 1/2 கப்
தண்ணீர் - 3 கப்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
• ஒரு பாத்திரத்தில் உடைத்த கோதுமையை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி விடவும்.
• பிறகு குக்கரில் வடிகட்டி வைத்துள்ள கோதுமை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பருப்பு வேகவைப்பது போல் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
• விசில் வந்த பிறகு உடனே குக்கரை திறக்காமல் 10 நிமிடம் கழித்து ஆறியதும் குக்கரை திறக்கவும்.
• கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
• அதே கடாயில், வெல்லத்தை சேர்த்து. அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.
• வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.
• அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.
• பின்பு அவற்றை மூடியை கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவைத்து ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.
• அடுத்ததாக,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு, பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.
• தித்திக்கும் சுவையான கோதுமை பாயாசம் ரெடி பாயாசத்தை வேறு பாத்திரத்தில் மாற்றி பின் பரிமாறலாம்.
- அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள்.
- கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிவக்கப் பொரித்தெடுங்கள்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1/2 கிலோ
நேந்திரம் பழம் - 5
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
• பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.
• மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள்.
• பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்து, கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிவக்கப் பொரித்தெடுங்கள்.
• சுவையான பழம்பொரி தயார்.
- கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- போண்டா பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விடவும்.
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுவையான கிரிஸ்பியான போண்டா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 துண்டு
வேர்கடலை - 50 கிராம்
பச்சைமிளகாய் - 3
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - 1 கப்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• ஒரு மிக்ஸியில் சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், வேர்கடலை ஆகியவற்றை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போடவும்.
• இதனுடன் அரைத்து வைத்திருந்த பொருட்களை போட்டு கைகளால் நன்கு பிசையவும்.
• பின்னர் வெங்காயம், தயிர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு போண்டா பதத்திற்கு பிசைந்து எடுத்து வைக்கவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.
• எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் தயாரித்து வைத்திருந்த போண்டாவை எடுத்து சிறு சிறு உருண்டையாக கில்லி போடவும்.
• அடுப்பை மீடியம் தீயில் வைத்து சமைக்கவும்.
• போண்டா பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விடவும்.
• இதோ கிரிஸ்பியான அரிசி மாவு போண்டா ரெடி.
• இதனுடன் நீங்கள் விருப்பப்பட்ட சட்னி, அல்லது சாஸ் வைத்து சாப்பிடலாம்.
- வாழைப்பூ குழந்தைகளுக்கு எப்படி எளிமையான முறையில் செய்து கொடுக்கலாம்.
- வேகவைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும்.
வாழைப்பூவில் பெருமளவில் மருத்துவ குணம் உள்ளது. ஆனால் இந்த வாழைப்பூவை குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பெரும் சிக்கலாகவே உள்ளது. வாழைப்பூ குழந்தைகளுக்கு எப்படி எளிமையான முறையில் செய்து கொடுக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்....
தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் - தேவையான அளவு
வாழைப்பூ - 1
கடலைப்பருப்பு - 3 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 3 ஸ்பூன்
பூண்டு - 7 பல்
வரமிளகாய் - 5
கறிவேப்பிலை - தாளிக்க
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பொடி அரைக்க...
• ஒரு வாணலியில் கடலைப்பருப்பு 2 ஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன், பூண்டு 7 பல், வரமிளகாய் 3 போன்வற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
• பின்னர் வறுத்த பொருட்களை நன்கு ஆறிய பின் ஒரு மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:
• வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.
• எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொறியவிடவும்.
• கடுகு பொறிந்ததும் கடலைப்பருப்பு 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 ஸ்பூன், வரமிளகாய் 2 ஆகியவற்றை சிறிது வதக்கவும்.
• பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
• வெங்காயம் வதங்கியவுடன் பொடியாக நறுக்கி வைத்திருந்த வாழைப்பூவை போட்டு நன்கு வதக்கவும்.
• இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூ, உப்பு சேர்க்கவும்.
• வாழைப்பூவில் உள்ள நீர் நன்கு வடிந்தவுடன் தயாரித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்கு கிளறவும்.
• அதன் பின்னர் வேகவைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும்.
• இதோ சுவையான வாழைப்பூ சாதம் ரெடி.
- நன்கு குழையும் வண்ணம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:
பயற்றம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 3 கப்
கோதுமைமாவு - 1/4 கப்
நெய் - 2 கப்
முந்திரி கொஞ்சம்
கேசரி பவுடர் கொஞ்சம்
செய்முறை:
• பயற்றம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, குக்கரில் நன்கு குழையும் வண்ணம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
• பிறகு சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுக்கவும். சிறிது எண்ணெய்யில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்.
• கோதுமையுடன் வேக வைத்த பருப்பு, சக்கரை, கேசரி பவுடர் சிறிதளவு, சேர்த்து கிளரவும்.
• நன்கு சுருண்டு வந்தவுடன் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம்.
- வேக வைத்த காராமணி, கொண்டைகடலை சேர்க்கவும்.
- இவை அனைத்தையும் 5 முதல் 10 நிமிடம் சமைக்கவும்.
தேவையான அளவு:
பச்சரிசி சாதம் - 2 கப்
துவரம்பருப்பு - வேக வைத்தது 1 கப்
மிளகு - 1 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 10
பரங்கிகாய் - 100 கி
கத்திரிக்காய் - 100 கி
அவரைக்காய் - 100 கி
சௌவ்சௌவ் - 100 கி
காராமணி - 100 கி
கொண்டைகடலை - 100 கி
பச்சை மிளகாய் - 2
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை - தாளிக்க
புளி - ஒரு எலும்மிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தாளிக்க
நெய் - தேவையான அளவு
மசாலா தயாரிக்கும் முறை:
• ஒரு வாணலியில் மிளகு, வெந்தயம், தனியா மூன்றையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும், பின்னர் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த அனைத்தையும் நன்று ஆறியவுன் மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
• வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றவும். அடுத்து கடுகு சேர்க்கவும். கடுகு நன்கு பொரிந்தவுடன், வரமிளகாய் 3, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
• பின்னர் நறுக்கி வைத்துள்ள பரங்கிகாய், கத்திரிக்காய், அவரைக்காய், சௌவ்சௌவ் ஆகிய காய்கறிகளை போட்டு 5 நிமிடம் நன்கு சமைக்கவும்.
• பின்னர் வேக வைத்த காராமணி, கொண்டைகடலை சேர்க்கவும்.
• அதன் பின் வேகவைத்த துவரம் பருப்பை சேர்க்கவும்.
• காய்கறி மற்றும் பருப்பு இரண்டையும் சேர்த்து 5 முதல் 8 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
• இந்த நிலையில் புளி தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும்.
• இவையனைத்து நன்கு வெந்தவுடன் தயாரித்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்க்கவும்.
• இதனுடன் பெருங்காயம், வேகவைத்த பச்சரிசி சாதத்தை சேர்க்கவும்.
• பின்னர் ஒரு 1/2 கப் தண்ணீர், மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
• இவை அனைத்தையும் 5 முதல் 10 நிமிடம் சமைக்கவும்.
• இதோ சுவையான பெருமாள் கோவில் கதம்ப சாதம் ரெடி.